உணவின் கடவுளாக மாறிய நயன்தாரா.. அன்னபூரணி ருசித்ததா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Annapoorani Twitter Review: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் அன்னபூரணி. மீண்டும் கதையின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் அவதரித்துள்ள இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது தங்கள் விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

annapoorani
annapoorani

அதில் நயன்தாரா ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் தாங்கி இருக்கிறார் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது. அது மட்டுமின்றி குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடும் ஒரு தரமான படைப்பு என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

nayanthara-annapoorani

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாராவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பது ஒரு புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு ஐயர் வீட்டு பெண்ணாக தன்னுடைய இலக்கை நோக்கி செல்லும் அவருடைய நடிப்பும் வழக்கம்போல் அருமையாக இருக்கிறது.

Also read: ஐயர் ஆத்து மாமிக்கு வந்த விபரீத ஆசை.. நயன்தாராவின் அன்னபூரணி கதை இதுதான்

அதேபோன்று ஜெய், சத்யராஜ் கதாபாத்திரங்களும் பக்கபலமாக இருக்கிறது. அந்த வகையில் முதல் பாதியே சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் கூட்டி இருக்கிறது. அதைத் தொடர்ந்து இடைவேளை காட்சியும் ரசிகர்கள் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் தான்.

annapoorani-review
annapoorani-review

சமீபகாலமாக ஆக்சன் மற்றும் திரில்லர் படங்கள் தான் அதிக அளவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வெளியாகி இருக்கும் இந்த அன்னபூரணி தற்போது ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளது.

Also read: அடேங்கப்பா! அசைவ மாமியாக நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் தெரியுமா? கடைசில மொத்தமும் புட்டுக்கிச்சு!

அந்த வகையில் உணவின் கடவுளாக மாறி ஒரு தரமான விருந்தை நயன்தாரா கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வெளிவரும் விமர்சனங்கள் அனைத்தும் பாசிட்டிவாக இருக்கும் நிலையில் படத்தின் வசூலும் லாபகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

review-annapoorani
review-annapoorani