மனைவியாகும் நயன்தாரா.. ஆனால் கணவர் விக்னேஷ் சிவன் இல்லையாமே! அச்சச்சோ!

பிரபல நடிகர் ஒருவருக்கு மனைவியாக உள்ள நயன்தாராவை பார்த்து, அப்போ விக்னேஷ் சிவன் கதி அவ்வளவுதானா? என அறையும் குறையுமாக விசாரித்து ஆளாளுக்கு கிசுகிசு பேசி வருகிறார்களாம்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை நயன்தாரா எவ்வளவு பெரிய நடிகை என்பது அனைவருக்குமே தெரியும். ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த படங்களுக்கு 8 கோடி வரை விலை பேசி வருகிறாராம்.

அது என்னமோ தெரியவில்லை, நயன்தாராவுக்கு வயது ஏற ஏறத்தான் மார்க்கெட்டும் படுபயங்கரமாக ஏறி வருகிறது. அதற்கு நயன்தாராவின் ராஜதந்திரம் தான் காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

அதனைத் தொடர்ந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் என்பவருடன் காதலில் விழுந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. இருந்தாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் ஜாலியாக காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர்.

nayanthara-vignesh-shivan-cinemapettai
nayanthara-vignesh-shivan-cinemapettai

ஆனால் விரைவில் நயன்தாரா பிரபல நடிகருக்கு மனைவியாக உள்ளாராம். அது வேறொன்றும் இல்லை, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் தெலுங்கு ரீமேக் ஒன்றில் வில்லன் மனைவியாக நடிக்க உள்ளாராம்.

மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். மேலும் அவருக்கு கணவராகவும் வில்லனாகவும் நடிக்க முக்கிய நடிகர் ஒருவருடன் பேசி வருகிறார்களாம் படக்குழுவினர்.

தெலுங்கு ரீமேக் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது புரியாமல் கோலிவுட் வட்டாரத்தில் நயன்தாராவை பற்றிய கிசுகிசுக்களை பரப்பி விட அது காட்டு தீ போல் பரவி விட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்