நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் இன்னும் ஒரு வருடம்தான் தாக்குப் பிடிக்கும்.. சத்தியம் செய்த பிரபலம்

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனுடன் செய்து வரும் காதல் இன்னும் ஒரு வருடம் கூட தாங்காது என பிரபலம் ஒருவர் ஓப்பனாக கூறியது நயன்தாராவும் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும் அந்த பிரபலம் தொடர்ந்த நயன்தாராவை தரம் தாழ்த்திப் பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். வயது 37 தாண்டினாலும் வாய்ப்புகள் குறைந்த பாடில்லை. அதைப்போல் சம்பளமும் படத்திற்கு படம் கோடிக்கணக்கில் எகிறிக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் யாராவது திருமணம் செய்து கொள்வார்களா. அதனால்தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த சில வருடங்களாகவே லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதெல்லாம் ஒருபுறமிருக்க விரைவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதி வருகின்றனர். ஆனால் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஸ்வரன் இருவரும் பிரிந்து விடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நயன்தாரா இன்னும் ஒரு வருடம் கூட விக்னேஷ் சிவனுடன் தாக்கு பிடிக்க மாட்டார் என சூடம் ஏற்றி சத்தியம் செய்துள்ளார். இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வட்டாரங்களில் பயில்வான் ரங்கநாதன் மீது கொலைவெறி உண்டாகும் அளவுக்கு கோவம் இருக்கிறதாம்.

vignesh-shivan-nayanthara-2
vignesh-shivan-nayanthara-2

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பற்றி பேசும்போது மட்டும் இந்தப் பிரபலம் மிகவும் தரக்குறைவாக பேசுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர் நயன்தாராவை மட்டுமல்லாமல் சினிமா வட்டாரங்களில் உள்ள பல நடிகைகளையும் தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசி வருவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. சிலரோ இவர் ஓபனாக உண்மையை சொல்வதால் பலரது வண்ட வாளங்கள் தண்டவாளங்களில் ஏறிக் கொண்டிருக்கிறது என சப்போர்ட்டும் செய்கிறார்களாம்.

- Advertisement -