20 கோடி வாங்கிட்டு டகால்டி கொடுத்த நயன்தாரா.. அடி மேல அடி மேல அடி வாங்கும் ஜோடிகள்

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர்களின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இவர்களின் திருமண வாழ்க்கை சற்று கோணல் மாணலாக தான் உள்ளது. விக்னேஷ் சிவனை நானும் ரவுடி தான் படப்பிடிப்பிலிருந்து காதலித்து திருமணம் செய்த நயன்தாரா அவருக்கு அப்போதிலிருந்தே பக்கபலமாக இருந்தார் .

இன்று வரை நயன்தாரா சிபாரிசிலேயே படங்களை இயக்கி வந்த விக்னேஷ் சிவன், ஏகே 62 படத்திலிருந்து விலக்கப்பட்டதிலிருந்து அவரது சினிமா கேரியர் சற்று சறுக்கலாகியுள்ளது. நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை ஆறுதல் படுத்தும் விதமாக, விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் அணுகி, ஏகே62 பட கதையில் நடிக்க வைக்க திட்டம் தீட்டி கொடுத்துள்ளார்.

Also Read: நீங்க இல்லன்னா என்னால பிழைக்க முடியாதா.. ஷாருக்கானை நம்பி புது கணக்கு போடும் நயன்தாரா

இப்படி ஒவ்வொன்றும் விக்னேஷ் சிவனுக்காக பார்த்து, பார்த்து செய்து வரும் நயன்தாரா, தற்போது அவரது நிலையை மறந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நயன்தாரா திருமணமான 6 மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்து தாயானார். அந்த விஷயம் காட்டு தீயாய் பரவிய நிலையில், மீண்டும் அந்த குழந்தைகளால் நயன்தாராவுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

நயன்தாரா தற்போது ஷாரூக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு வராமல் உள்ளது. இதற்கு காரணமாக அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னாலும், நயன்தாரா செய்த டகால்டி வேலை தான் முக்கிய காரணமாக வெளிவந்துள்ளது. தமிழில் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து நயன்தாரா இரண்டு படங்களில் நடிக்க கமிட்டானார்.

Also Read: நயன்தாராவுடன் போட்டி போட்ட சேச்சி.. ஓவர் பில்டப் கொடுத்து மூக்குடைந்த சம்பவம்

மேலும் அட்வான்ஸ் பணத்தையும் வாங்கிவிட்டு சென்ற நயன்தாரா, ஒரு படத்துக்கு தலா 10 கோடி வீதம் 20 கோடிவரை சம்பளம் பேசப்பட்டது. ஆனால் படப்பிடிப்பிற்கு வரமால் நயன்தாரா இழுத்து அடித்துள்ளார். இதற்கான காரணமாக குழந்தைகளை பார்த்து கொள்வதில் படு பிசியாக உள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது .இந்நிலையில் பொறுத்து, பொறுத்து பார்த்த தயாரிப்பாளர்கள் நயன்தாரவுக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கடுப்பில் திருப்பி வாங்கிவிட்டு சென்றுள்ளனர்.

ஏற்கனவே திருமணமான நாளிலிருந்து கெட்ட நேரம் ஆரம்பித்த நிலையில், தற்போது குழந்தைகளால் பெரிய அடி நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் விழுந்துள்ளது. இந்த நிலையில், கையில் உள்ள படங்களை முடித்துவிட்டு, நயன்தாரா குடும்பம், குழந்தைகளை பார்த்து கொண்டு வீட்டிலேயே குடும்ப தலைவியாக வழி நடத்துவதற்கான பிளான்களை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: நயன்தாராவை வைத்து அஜித்துக்கு கொடுக்கப் போகும் நோஸ்கட்.. புளியங்கொம்பை பிடித்த விக்னேஷ் சிவன்

- Advertisement -