விரலில் மோதிரத்துடன் விக்னேஷ் சிவன் நெஞ்சில் கை வைத்து போஸ் கொடுத்த நயன்தாரா.. நிச்சயம் ஆயிருச்சு போல!

நீண்ட நாட்களாகவே கோலிவுட் வட்டாரங்களில் உலா வரும் செய்தி என்னவென்றால் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்பது தான். விரைவில் இருவரும் சீக்கிரம் பிரிந்து விடுவார்கள் எனவும் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா பல்வேறு காதல் தோல்விகளுக்கு பிறகு கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்.

இருவரும் செல்லுமிடமெல்லாம் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு பழைய காதலர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். அதனை பார்த்த ரசிகர்கள் இதேபோல் நயன்தாரா எத்தனை ஹீரோக்களுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா என கிண்டலடித்தனர்.

ஆனால் விக்னேஷ் சிவன் அதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. நான் நயன்தாராவின் காதலர், அவ்வளவுதான் என கெத்தாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் கிளம்பின.

ஒரு சிலர் இவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் எனவும், விரைவில் இருவரும் பிரிந்து விடுவார்கள் எனவும் சூடம் ஏற்றி சத்தியம் செய்ததை பார்த்து பார்த்திருக்கிறோம். ஆனால் தங்களைப் பற்றிய தவறான நெகட்டிவ் விமர்சனங்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

nayanthara-vigneshsivan-latest-photo
nayanthara-vigneshsivan-latest-photo

நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்கி நயன் என்ற பெயருடன் கையில் மோதிரம் போட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் இருவரும் நிச்சயம் செய்து கொண்டார்களா அல்லது நயன்தாரா அடிப்படையில் கிரிஸ்டியன் என்பதால் அந்த முறையில் திருமணம் செய்து கொண்டார்களா எனவும் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்த சந்தேகம் காட்டு தீ போல் பரவி வருகிறது.

- Advertisement -