கல்யாணத் தேதியை குறித்த நயன்தாரா.. தலைகால் புரியாத கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்

குறைந்தது இதுவரை சமூகவலைதளத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு பத்து முறையாவது திருமணம் செய்து வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை இருவரது கல்யாணம் பற்றிய செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கும்.

ஆனால் மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து நயன்தாரா கடவுள் மற்றும் ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்ததாக தகவல்கள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜோசியர் என்ன சொன்னாலும் அதை தவறாமல் செய்து வருகிறாராம்.

அப்படி ஒரு ஜோசியர் விக்னேஷ் சிவனை விட உன்னை புரிந்து கொள்ளும் வேறு ஆண்மகன் கிடைக்கப்போவதில்லை என அந்த ஜோசியர் சொன்ன பிறகுதான் விக்னேஷ் சிவனை கணவராக மாற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்தாராம் நயன்தாரா.

நயன்தாராவின் வாழ்க்கையில் காதல் சர்ச்சைகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. ஒருவேளை ஜோசியக்காரர் மாற்றி கூறியிருந்தால் விக்னேஷ் சிவனை கழட்டி விட்டு போகவும் கொஞ்சம் கூட யோசித்திருக்கமாட்டார் நயன்தாரா.

nayanthara-vigneshivan-cinemapettai
nayanthara-vigneshivan-cinemapettai

இருவருக்கும் திருமணம் நடக்குமா என பல வருடமாக கனவு கண்டுகொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு தற்போது அந்த கனவு பலிக்கும் நேரம் வந்துவிட்டதாம். சமீபத்தில் நயன்தாரா ஒரு ஜோசியரிடம் தன்னுடைய கல்யாணத்துக்கான தேதியை கேட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவரும் மார்ச் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியை குறித்து கொடுத்து விட்டாராம். இந்த செய்தி விக்னேஷ் சிவனுக்கு செல்ல, தலைவனுக்கு ஏகபோக சந்தோசம். இந்த முறையாவது சொன்னபடி திருமணம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -