விக்னேஷ் சிவனை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. நயன்தாராவுக்கு சொந்த ரத்தம் கொடுத்த அட்வைஸ்

நயன்தாரா இதுவரை எப்படி இருந்தாலும் இனிமேல் விக்னேஷ் சிவனுடன் தான் அவருடைய கடைசி வரை வாழ்க்கை என்பதை முடிவு செய்து விட்டதாக கூறுகின்றனர். அதற்கு காரணம் அவருடைய சொந்த ரத்தம் ஒருவர் கொடுத்த அட்வைஸ் தானாம்.

நயன்தாரா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ராணியாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் நிறையவே கஷ்டப்பட்டு விட்டார். சிம்பு, பிரபுதேவா போன்றோரை காதலித்து அதில் நிறைய கஷ்டப்பட்டு விட்டதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

அதுவும் பிரபுதேவா கூட திருமணம் செய்துகொள்ள மதம் எல்லாம் மாறினார். இருந்தாலும் எதுவுமே கைகூடவில்லை. காதலிக்கும் போது இருக்கும் சந்தோசம் கல்யாணம் என்றதும் நயன்தாரா வாழ்க்கையில் இல்லாமல் போய்விடுகிறது.

அதன் காரணமாகவே விக்னேஷ் சிவனுடன் பல வருடமாக காதலில் இருந்து வரும் நயன்தாரா திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டி வருகிறாராம். இப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்வது சாதாரண விஷயமாகி விட்டது. அதுவும் நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்தாலும் அவர்கள் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. இப்படி ஒரு முடிவில் இருந்த நயன்தாராவிடம் அவரது தந்தை சமீபத்தில் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், அதுதான் என்னுடைய கடைசி ஆசை எனவும் கூறினாராம்.

nayanthara-vignesh-shivan-cinemapettai
nayanthara-vignesh-shivan-cinemapettai

சமீபத்தில்கூட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வெளியில் சென்ற புகைப்படங்கள் வைரல் ஆனது. இந்நிலையில் நயன்தாராவின் தந்தை கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் நயன்தாராவின் திருமணத்தை பார்க்க ஆசைப்படுகிறாராம். விரைவில் திருமண செய்தி வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -