சினிமாவைத் தாண்டி டீக்கடையில் முதலீடு செய்த லேடி சூப்பர் ஸ்டார்.. ரகசியம் என்ன தெரியுமா?

நடிகர்கள் அனைவரும் நடிப்பைத் தாண்டி ரியல் எஸ்டேட் போன்ற வேறு சில தொழில்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாரா, சாய் வாலே என்ற டீ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா புதிய படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில், கிளைகளை அதிகரிக்க இந்நிறுவனம் முடிவு செய்து, அதற்காக முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.5 கோடியை அந்த நிறுவனம் பெற முடிவு செய்துள்ளது.

nayanthara-vignesh-shivan
nayanthara-vignesh-shivan

இந்நிலையில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மற்றும் மும்பையைச் சேர்ந்த யுனி-எம் நெட்வொர்க் கும் இந்த நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளது. இதுமட்டுமின்றி சுனில் சேத்தியா, சுனில் குமார் சிங்க்வி, மனிஷ் மார்டியா போன்ற முதலீட்டாளர்கள் உள்ள இந்தப் பட்டியலில் தற்போது, நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து சாய் வாலே நிறுவனர் விதுர் மகேஸ்வரி கூறும்போது, ‘அடுத்த வருடத்துக்குள் 35 கடைகளை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். மீதமுள்ள தொகையை எங்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்’ என தெரிவித்துள்ளார்.

- Advertisement -