நயன்தாராவால் பிரம்மாண்ட பட வாய்ப்பை நழுவ விட்ட சிம்பு.. இதென்னடா வம்பா போச்சு!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். ஆனால் ஒரு சமயத்தில் நடிகர் சிம்புவுடன் பயங்கர நெருக்கமாக நயன்தாரா இருந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த சமயத்தில் கோலிவுட்டின் ஹாட் டாக்காக இவர்களின் காதல் விவகாரம் தான் இருந்து வந்தது.

பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து தற்போது நண்பர்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம் என்பதற்கு உதாரணமாகவே இது நம்ம ஆளு படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

ஆனால் அது வெறும் படத்திற்காக மட்டும்தானாம். அந்த படத்திற்கு பின்னர் இருவரும் பேசிக் கொள்வது இல்லையாம். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் படம் தொடங்கிய போது இயக்குனர் மணிரத்தினம் முதலில் சிம்புவை தான் ஒப்பந்தம் செய்துள்ளார். சிம்புவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து நயன்தாராவிடம் இயக்குனர் மணிரத்னம் பேசியபோது சிம்பு இருந்தால் இந்தப் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என நயன்தாரா கூறியுள்ளார். நயன்தாரா மட்டுமின்றி படத்தில் கமிட்டான மற்ற நடிகர்களும் இதையே கூறியுள்ளனர்.

இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளான மணிரத்தினம் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளார். அந்த சூழ்நிலையில் மணிரத்னம் கஷ்டம் அறிந்த சிம்பு, சார் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு, விடுங்க சார் என்று கூறி அவரே படத்திலிருந்து விலகி விட்டாராம்.

STR-Manirathinam

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -