அப்போ நயன்தாராவை கேவலப்படுத்திய நடிகர்.. இப்போ அவர்தான் வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறாராம்

வாழ்க்கை ஒரு வட்டம்டா எனும் விஜய்யின் திருமலை பட வசனம் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ. நயன்தாராவுக்கு பக்காவாக பொருந்துகிறது. ஒரு கட்டத்தில் நயன்தாராவை பார்த்து கிண்டல் செய்யாதவர்களே கிடையாது.

சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றாலும் சொந்த வாழ்க்கையில் நிறைய கோட்டை விட்டுவிட்டார். கொஞ்சம் மானமும் மரியாதையும் சேர்ந்தே சென்றது. போதாக்குறைக்கு சமூக வலைதளங்களில் நயன்தாராவுக்கு கேவலமான பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆக இருந்த நயன்தாரா அது கைவிடாத காரணத்தால் மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். ஆரம்பம் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்தது. போதாக்குறைக்கு சர்ச்சை நடிகை என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.

இதன் காரணமாக முன்னணி மூத்த நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க நயன்தாராவின் பெயர் அப்போது சிபாரிசு செய்யப்பட்டதாம். ஆனால் அவரோ, அவர் எல்லாம் வேண்டாம், ஏற்கனவே பெயர் கெட்டு நாறிக் கொண்டிருக்கிறது, அது நம்முடைய படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிடும் என சொல்லிவிட்டாராம்.

ஆனால் தற்போது அடுத்ததாக அவர் நடிக்கும் படத்திற்கு நயன்தாரா இருந்தால் நன்றாக இருக்குமே என தூதுவிட்டு உள்ளாராம் அந்த நடிகர். அந்த நடிகர் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க.

இதைக் கேள்விப்பட்ட நயன்தாரா அந்த நடிகர் அசிங்கபடுத்தியதை அப்படியே ஞாபகத்தில் வைத்து தன்னிடம் ஒப்பந்தம் செய்ய வந்தவர்களிடம் சொல்லி, அவரிடம் மறக்காமல் சொல்லிவிடுங்கள் எனக் கெத்துக் காட்டிய சம்பவம்தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

nayanthara-cinemapettai-01
nayanthara-cinemapettai-01
- Advertisement -