தடுப்பூசி சர்ச்சை.. ஊசி இருக்கும் புகைப்படம் வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு முதல் மாநில அரசு வரை கேட்டுக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் நடிகர் நடிகைகளும் தங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து தடுப்பூசி போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

உடன் சேர்ந்து நயன்தாராவுக்கு சர்ச்சையையும் கிளப்பியது அந்த புகைப்படம். நயன்தாராவுக்கு தடுப்பூசி போடுவது போல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நர்சின் கையில் ஊசியே இல்லை என பெரிய சர்ச்சையைக் கிளப்பி விட்டனர்.

இதனால் அதிர்ந்து போன நயன்தாரா தரப்பு ஊசி போடும் போது வேறு ஒரு ஆங்கிளில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதில் ஊசி போடும் நர்சின் கையில் ஊசி மிகச் சிறியதாக இருப்பதை வட்டமிட்டு காட்டியுள்ளனர்.

இந்த செய்தி தான் நேற்று தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக நயன்தாரா என்றாலே தமிழ்நாட்டில் பெரிய பிரளயமே ஏற்பட்டு விடுகிறது.

nayanthara-vaccacine
Nayantara- vaccine
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்