ஷாருக்கானுடன் நடிக்க ஓகே, ஆனால் சில கண்டிஷன்.. அட்லீக்கு செக் வைத்த நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அடுத்த படத்தை எடுக்க உள்ளார். இதற்கான அறிவிப்புகள் அரசல் புரசலாக வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோனே முதல் பிரியங்கா சோப்ரா வரை பல நடிகைகளின் பெயர் அடிபட்டு வந்த நிலையில் அட்லீ, நயன்தாரா தான் வேண்டும் என அடம்பிடித்து அந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்.

நயன்தாராவும் அட்லீயுடன் நல்ல நட்பில் இருப்பதால் இந்த வாய்ப்புக்கு ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் பாலிவுட் சினிமா பத்தி எல்லாருக்குமே தெரியுமல்லவா. ஒரு நடிகை கிடைத்தால் அவரை புரட்டி எடுக்காமல் விடமாட்டார்கள்.

அதை யோசித்த நயன்தாரா, கண்டிப்பாக ஷாருக்கானுடன் உதட்டு முத்தக்காட்சி, பெட்ரூம் ரொமான்ஸ் போன்றவற்றில் நடிக்க மாட்டேன். அதேபோல் பாடல் காட்சிகளில் ஓரளவு கிளாமர் காட்டுவேன், ஆனால் மற்ற பாலிவுட் நடிகைகளை போல் என்னால் கிளாமர் காட்ட முடியாது. அப்படி நடித்தால் தமிழ் ரசிகர்களிடம் கெட்டபெயர் ஆகிவிடும் என கூறியுள்ளாராம் நயன்தாரா.

இதனால் அதிர்ந்து போன அட்லீ, இதை எப்படி ஷாருக்கானிடம் சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். பாலிவுட் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகிகள் கிளாமர் உடை அணிந்து நடனம் ஆடுவது அடிப்படையான ஒன்று.

அதேபோல் குறைந்தது ஒரு உதட்டு முத்தக்காட்சியாவது வைத்துவிட வேண்டும். ஆனால் நயன்தாராவின் இந்த கண்டிஷன் பாலிவுட் சினிமாவுக்கு ஒத்து வருமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. இதை அட்லீ எப்படி சமாளிக்கப் போகிறாறோ?

atlee-nayanthara-cinemapettai
atlee-nayanthara-cinemapettai
- Advertisement -