அதிக விலைக்கு விற்பனையான நயன்தாரா திரைப்படம்.. நல்ல லாபம் பார்த்த தயாரிப்பாளர்

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர்.

இவர் தற்போது ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் O 2 .

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்த விக்னேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இப்படம் ஒரு பேருந்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான காட்சிகள் பேருந்தில் நடப்பது போன்று இருப்பதால், இதற்காக ஒரு பேருந்தை வாங்கி அதில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குனர்.

சமீபகாலமாக நயன்தாராவின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரங்கள் திறமையாக நடித்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் இந்த படத்திலும் யூ டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான குழந்தை ரித்விக் முக்கிய கேரக்டரில்  நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஆக்சிஜன் என்பதை குறிக்கும் வகையில் O2 என்ற பெயரை படக்குழுவினர் வைத்துள்ளார்களாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பு பணிகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில் இத்திரைப்படம் விரைவில் ஓடிடி யில் வெளியாக உள்ளது.

மிகவும் சிக்கனமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் 10 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு சுமார் 22 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த செலவில் அதிக லாபம் பார்த்துள்ளார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு.

Advertisement Amazon Prime Banner