சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

2 ஜாம்பவான்களுடன் இணையும் நயன்தாரா.. திரிஷா மிஸ் செய்த கேப்பில் கெடா வெட்டிய லேடி சூப்பர் ஸ்டார்

Trisha-Nayanthara: திருமணம் ஆனால் சிலருக்கு வாய்ப்புகள் எட்டாக்கனியாக மாறிவிடும். ஆனால் நயன்தாரா விஷயத்தில் அது அப்படியே தலைகீழாக இருக்கிறது. சமீபத்தில் இவரின் ஜவான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த இறைவனும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதைத்தொடர்ந்து டெஸ்ட், லேடி சூப்பர் ஸ்டார் 75 உள்ளிட்ட படங்கள் விறுவிறுப்பாக படமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமலின் 234 ஆவது படத்திலும் இவர்தான் ஹீரோயின் என வெளிவந்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இவர் இதுவரை உலகநாயகனுடன் இணைந்து நடித்ததே கிடையாது.

20 வருடங்களாக சினிமாவில் கெத்து காட்டி வரும் நயன்தாரா சூப்பர் ஸ்டார், விஜய், அஜித் என உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணி அந்தஸ்தை அடைந்தார். ஆனாலும் கமலுடன் மட்டும் ஜோடி சேரவில்லை. இது அவருடைய திரைவாழ்வில் ஒரு பெரும் குறையாக இருந்தது என்றே சொல்லலாம். ஆனால் அந்த குறை இப்போது தீர்ந்து விட்டது.

அது மட்டுமின்றி மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் இவர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தார். ஆனால் அது ஜஸ்ட் மிஸ் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் மூலம் அவருடைய கனவு நிறைவேறி இருக்கிறது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதையாக நயன்தாரா ஒரே படத்தின் மூலம் இரண்டு ஜாம்பவான்களுடன் கைகோர்க்க இருக்கிறார்.

மேலும் இப்படத்தில் முதலில் நடிப்பதற்கு திரிஷாவை தான் அணுகி இருக்கின்றனர். ஏற்கனவே இவர் கமலுடன் சில படங்களில் நடித்த நிலையில் இப்படத்தில் நடிக்கவும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது தவறி போய் நயன்தாராவின் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

இதற்கு முன்னதாக பாலிவுட் ஹீரோயின் வித்யா பாலனிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். ஆனால் தற்போது நயன்தாரா நடிப்பது தான் கிட்டத்தட்ட உறுதியான தகவலாக இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் டைட்டில் டீசர் கமலின் பிறந்த நாளான நவம்பர் 7 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவும் இருக்கிறது. அதைத்தான் இப்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News