நயன்தாரா நடிக்காமல் இருப்பதே நல்லது என கோலிவுட் வட்டாரத்தில் விமர்சித்து வருவது தற்போது வைரலாகியுள்ளது. நடிகர் சரத்குமாரின் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா இன்று முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தோடும் உச்சத்தில் உள்ளார்.
இதனிடையே சமீபத்தில் ஆறு ஆண்டுகளாக தான் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டு தற்போது ஹனிமூனிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்குப் பின்னால் முத்தக் காட்சிகள்,ரொமான்ஸ் காட்சிகள்,நெருக்கமான காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என நயன்தாரா அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், நயன்தாரா தற்போது திருமணத்திற்கு பின்பு நடிக்காமல் இருந்தால் கூட நல்லது என கோலிவுட் வட்டாரத்தில் விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு வரையில் எந்த ஒரு படத்தின் கடினமான காட்சிகளிலும் எவ்வளவு நேரமானாலும் நடித்து முடித்துக் கொடுத்து செல்வாராம்.
ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்ததற்கு பின்பு பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமானது.இந்த நிலையில் படத்தில் சுலபமான காட்சிகளில் மட்டுமே நடிப்பேன் எனவும் தான் அணிந்திருக்கும் ஆடைகளில் கூட அழுக்கு படியக்கூடாது எனவும் பல விதிமுறைகளை விதித்து நடித்து வந்ததால் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நயன்தாராவால் கடுப்பாகி உள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் இவரது நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ஓ2 திரைப்படம் தோல்வி அடைந்துள்ளது. இத்திரைப்படத்தின் தோல்விக்கும் நயன்தாரா இஷ்டத்துக்கு நடித்தது தான் காரணம் என்று தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நயன்தாராவிற்கு தற்போது பட வாய்ப்புகள் இருந்து வருகிறது
இதனிடையே படங்களில் நடிக்க கட்டுப்பாடுகளை விதித்ததற்கு நயன்தாரா திரைப்படங்களில் நடிக்காமல் இருப்பதே நல்லது என கோலிவுட் வட்டாரத்தில் பலரும் விமர்சித்து வருவது தற்போது வைரலாகியுள்ளது