தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் நயன்தாரா.. ஒன்னுக்கு ரெண்டா புக் செய்த விக்னேஷ் சிவன்

பொதுவாகவே சென்னையில் இடமோ, வீடோ வாங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அதிலும் போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்றாலும் சாதாரண ஆட்களால் நிச்சயம் அது முடியாது. ஏனெனில் விஐபிக்கள் மட்டுமே அங்கு இருக்க முடியும். உதாரணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர்களை போன்றவர்கள் தான் அங்கு வசித்து வருகிறார்கள்.

தற்போது இந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இணைய உள்ளார். ஆம் நயன்தாரா போயஸ் கார்டனில் பிளாட் வாங்கியுள்ளாராம். ஒன்னு இல்லைங்க இரண்டு பிளாட் வாங்கி இருக்காராம். இன்னைக்கு தேதிக்கு கோலிவுட் மட்டும் இல்லாம தென்னிந்திய சினிமால நம்பர் ஒன் நடிகைனா அது நயன்தாரா மட்டும் தான்.

அதுமட்டும் இல்லைங்க ஸ்டார் ஜோடினா அதுவும் நயன் மற்றும் விக்கி தான். இவங்க திருமணம் எப்போ நடக்கும்னு தான் கோலிவுட்டே எதிர்பார்த்திட்டு இருக்கு. ஆனா நயன்தாரா தற்போது கைவசம் தமிழ் மலையாளம் என கிட்டத்தட்ட 6 படங்களை கைவசம் வைத்துள்ளார். எனவே இந்த முடித்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் முடிஞ்சதும் நயன் மற்றும் விக்கி அமைதியா வசிக்க ஒரு இடம் வேணும்னு நினைச்சு தேடிருக்காங்க. அப்போ தான் போயஸ் கார்டன்ல இருக்கற அபார்ட்மெண்ட்ட நயன் பார்த்திருக்காங்க. அந்த அபார்ட்மெண்ட் நயனுக்கு ரொம்பவே பிடிச்சதால ஒன்னு இல்லாம ரெண்டு அபார்ட்மெண்ட்டை புக் பண்ணிட்டாங்களாம்.

விரைவில் திருமணம் முடிஞ்சு விக்கி நயன் ஜோடி போயஸ் கார்டனில் குடியேறும்னு எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் இருக்குற நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாரும் போயஸ் கார்டனில் குடியேற போறாங்க. இதுல இன்னொரு விஷயம் என்னனா பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் சமீபத்தில் தான் போயஸ் கார்டனில் வீடு கட்டுவதற்காக பூமி பூஜை போட்டுள்ளார்.

dhanush-new-house
dhanush-new-house

இந்நிலையில் நயன்தாரா அதே பகுதியில் அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளதால் தனுஷுக்கு போட்டியாக தான் வாங்கி உள்ளாரோ என ஒருபக்கம் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்