விருதுகளை குவித்து வரும் நயன்தாரா படம்.. அத்தனையும் விக்னேஷ் சிவனின் திருவிளையாடல்!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் முன்னணி நடிகை நயன்தாரா படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.

தற்போது இவர்கள் தயாரிப்பில் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இதுமட்டுமின்றி பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூழாங்கல் படத்தையும் நயன்தாரா தயாரித்துள்ளார்.

தற்போது இப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது. முன்னதாக நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.

ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் கூழாங்கல் படம் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது.

இந்த நிலையில் கூழாங்கல் படம் இத்தாலியில் நடந்த சார்ட்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றுள்ளது. நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் படம் தொடர்ந்து விருதுகளை பெற்று வருவதால், திரைத்துறையினர் நயன்தாராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாராவுக்கு என்னவோ பாராட்டுகள் குவிந்தாலும், இதற்கு பின்னணியில் இருந்து வேலை பார்த்தது விக்னேஷ் சிவனின் திருவிளையாடல் தான் என்று கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கின்றனர்.

- Advertisement -