சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய் சேதுபதி வந்தா நாங்க வரணுமா.? தன்மானத்தை விட்டுக் கொடுக்காத 5 நடிகர்கள்

நயன்தாராவின் திருமணத்திற்கு தல அஜித் மற்றும் தளபதி விஜய் தங்களது தன்மானத்தை இழக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதனிடையே நயன்தாரா இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களை தனது திருமணத்திற்காக பத்திரிக்கை வைத்து அழைத்திருந்த நிலையில், ரஜினிகாந்த், ஷாருக்கான்,அட்லி, சூர்யா,ஜோதிகா உள்ளிட்ட சில பிரபலங்கள் மட்டுமே வருகை தந்திருந்தனர். மேலும் நயன்தாராவுடன் நடித்த தல அஜித், தளபதி விஜய், விஷால், ஜீவா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வருகை தராதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே தல அஜித் மற்றும் தளபதி விஜய், நயன்தாராவின் திருமணத்திற்கு வருவதை ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால் நயன்தாராவின் திருமணத்தில் போடப்பட்ட விதிமுறைகள் இருவருக்கும் தன்மானத்தை இழக்கும் பிரச்சனையாக இருந்ததாம்.

ஏனென்றால் நடிகை நயன்தாரா தனது திருமண வீடியோவை கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய்க்கு பிரபல ஓடிடி தளத்தில் விற்று வியாபாரம் செய்தார். மேலும் திருமணத்திற்கு வருவோர்களின் செல்போன்களுக்கு அனுமதியில்லை என்றும் பல விதிமுறைகள் இருந்தது. இதனிடையே தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவரும் நயன்தாராவின் திருமணத்தில் ஒரே மேடையில் பல வருடங்கள் கழித்து சந்திப்பார்கள் என்பது உறுதியானது..

ஆனால் இவர்கள் இருவரின் வருகையை கூட, நயன்தாரா வியாபாரமாக பார்த்து விடுவார் எனவும் தல அஜித் மற்றும் தளபதி விஜயின் புகைப்படங்களை ஓடிடி தளத்தில் கூடுதல் விலைக்கு விற்று மறைமுகமாக ரசிகர்களை ஏமாற்ற கூடிய செயலில் நயன்தாரா ஈடுபடுவார் என்பதை அறிந்துக் கொண்டு இருவரும் திருமணத்திற்கு வராமல் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த அஜித், விஜய், நயன்தாராவின் திருமணத்தில் போடப்பட்ட விதிமுறைகளால் தங்களின் தன்மானம் பாதிக்கப்படும் வகையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இருந்தாலும் தல அஜித்தின் குடும்பத்தார் மற்றும் தளபதி விஜய்யின் குடும்பத்தார், நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இது திடீர் திருமணமும் கிடையாது, நடிகர்கள் எப்பொழுதுமே பிசியாக இருந்தாலும் இது போன்ற முக்கியமான அதுவும் ஸ்டார் ரேஞ்சுக்கு உள்ள நடிகையின் திருமணத்தில் கலந்து கொள்வதுதான் நியாயம் என ரசிகர்கள் ஒரு புறம் புழம்பி தான் வருகின்றனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்ததால் கண்டிப்பாக திருமண வீட்டில் கை நனைத்த தானா ஆக வேண்டும்.

- Advertisement -

Trending News