வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மொத்த வாலையும் சுருட்டி பம்மும் நயன்தாரா.. பணம் பத்தும் செய்யும்ன்னு சும்மாவா சொன்னாங்க!

Actress Nayanthara: சினிமாவை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வி என்பது எப்போதுமே நிரந்தரமான ஒன்று இல்லை. வாய்ப்பே இல்லாமல் டம்மி பீசாக சுற்றுக் கொண்டிருந்த நடிகர்கள் திடீரென உச்சத்திற்கு செல்வார்கள். அதே போன்று டாப் ஹீரோக்களாக வலம் வந்த சிலர் சட்டென படங்களே இல்லாமல் எங்கே போனார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு போய்விடுவார்கள். இது எல்லாம் புரியாமல் தான் கடந்த சில வருடங்களாக நயன்தாரா கொஞ்சம் ஓவராக ஆடிவிட்டார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எல்லோரும் நயன்தாரா தான் தங்களின் படங்களுக்கு ஹீரோயின் ஆக நடிக்க வேண்டும் என நிபந்தனை போடும் அளவுக்கு அப்போது இருந்தது. இதனால் அம்மணி தான் வைத்தது தான் சட்டம் என செல்லப் பிள்ளையாகவே வளர்ந்து விட்டார். சினிமா எப்போது வேண்டுமானாலும் காலை வாரி விடும் என்பதை மறந்து விட்டார்.

காதல் கணவருடன் ஆன திருமணத்திற்கு பிறகு எல்லாமே மொத்தமாக மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் நயன்தாராவை திரும்பிப் பார்க்க கூட ஆள் இல்லை என்று கூட சொல்லலாம். அஜித் மற்றும் விஜய்யின் அடுத்த அடுத்த படங்களில் நடிகை திரிஷா கதாநாயகியாக ஒப்பந்தமாகி கொண்டிருக்க, நயன் இப்போதுதான் தமிழில் சித்தார்த்துடன் ஒரு படம் பண்ண இருக்கிறார்.

நயனுக்கு மொத்தமும் இப்போது பாலிவுட் கனவு தான். அதற்கு முக்கிய காரணம் ஜவான் படம். இந்த படத்தில் அவர் நடிக்க 10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. அத்தோடு இந்தப் படம் பாலிவுட்டில் செம ஹிட் அடித்தது. இதன் மூலம் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால் அவர் தற்போது இந்தி திரை உலகை தான் மொத்தமாக நம்பி இருக்கிறார்.

நயன் இப்போது இரண்டு பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறார். இந்தி திரை உலகின் முன்னணி இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ஹீரோயின் ஆக நடிப்பதற்கு இவருக்கு 12 கோடி சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. மேலும் படத்தின் பிரமோஷன் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் வந்தே ஆக வேண்டும் என ஒப்பந்தத்தில் முன்னரே கையெழுத்தும் வாங்கி விட்டார்களாம்.

இங்கு புளிப்பு காட்டிக்கொண்டிருந்த நயன்தாராவுக்கு பாலிவுட் சினிமா பாடம் கத்து கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவரும் பட வாய்ப்புக்காக மொத்த கொள்கையும் தளர்த்துவிட்டார். இனி நயன்தாராவை இந்தி தொலைக்காட்சிகளில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கண்டிப்பாக பார்க்கலாம் என தெரிகிறது.

- Advertisement -

Trending News