இன்ஸ்டாகிராமில் நயன்தாரா பாலோ செய்யும் ஒரே பிரபலம்.. காசு மோகத்தால் நம்ம ஆட்களை மதிக்காத அம்மணி

Nayanthara Instagram Followers: சில வருடங்கள் முன்பு வரை கொடி கட்டி பறந்த நயன்தாராவுக்கு, திருமணத்திற்கு பிறகு எல்லாமே சொதப்பல் தான். அவர் இப்போதைக்கு வரைக்கும் மலை போல் நம்பி இருப்பது ஜவான் படத்தை தான். ஜவான் படத்திற்கு பிறகு எப்படியாவது பாலிவுட்டிற்குள் நுழைந்து விட வேண்டும் என்று பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார், தென் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார்.

சினிமாவில் உச்சாணி கொம்பில் இருந்த காலகட்டத்திலேயே நயன்தாரா, சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு அக்கவுண்ட்டை வைத்துக் கொண்டது கிடையாது. இவரைப் பற்றி அப்டேட்டுகள் வேண்டும் என்றால் விக்னேஷ் சிவனின் சமூக வலைதள பக்கத்தில் தான் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடைய சொந்த வாழ்க்கையை ரொம்பவும் சீக்ரெட் ஆக மெயின்டைன் பண்ணுவதை கொள்கையாகக் கொண்டிருந்தார்.

Also Read:பெரிய ஓபனிங் இல்லாத ஜவான் படம் .. ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே ஒதுக்கப்படும் ஷாருக்கான்

ஜவான் படத்தின் ப்ரமோஷனுக்காக அந்த கொள்கையையும் தளர்த்தியதோடு, கவர்ச்சியிலும் தாராளம் காட்டினார். அவருடைய பாலிவுட் பகல் கனவுக்காக என்ன தோணுதோ அதை செய்து கொண்டு போகிறார் என்று ரசிகர்களும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் நயன் யாருமே எதிர்பார்க்காத ஒரு மட்டமான வேலையை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே, மூன்று மில்லியன் ஃபாலோவர்களை கடந்துவிட்டார் நயன். சரி அவர் யார், யாரை ஃபாலோ செய்கிறார் என்று பார்க்கும் பொழுது தான், தென்னிந்திய சினிமா மீது அம்மணிக்கு எவ்வளவு காண்டு இருக்கிறது என தெரிந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி மொத்தமாகவே 22 பேரை பின் தொடரும் இவர், பாலிவுட் நடிகைகளை அதிகமாக பாலோ செய்கிறார்.

Also Read:மொத்த வித்தையையும் இறக்கிய ஷாருக்கான்.. ஜெயித்தாரா அட்லி.? ஜவான் ட்விட்டர் விமர்சனம்

மேலும் இவர் ஒரே ஒரு நடிகரை மட்டும் தான் பின் தொடர்கிறார். அது நம் பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் தான். முழுக்க முழுக்க ஷாருக்கானை நம்பித்தான் நயன்தாராவின் பாலிவுட் கனவு இருக்கிறது என்றாலும், அதை அம்பலமாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம். தென்னிந்திய சினிமாவை சார்ந்த எந்த ஒரு நடிகர்களையும் இவர் பின் தொடரவில்லை. குறிப்பாக ரஜினி மற்றும் விஜய்யையும் கூட.

ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய வளர்ச்சிக்கு வித்திட்டது ரஜினி மற்றும் விஜய் தான். சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் இருந்த பொழுது, விஜய்யின் சிவகாசி படத்தில் ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலுக்கு ஆடிய பிறகு தான் மீண்டும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதேபோன்று சில சர்ச்சைகளால் சினிமாவில் ஒதுங்கி இருந்த நயன், சிவாஜி படத்தில் பல்லேலக்கா பாடலுக்கு ஆடிய பிறகுதான் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பாலிவுட் ஆசையால் வளர்த்து விட்டவர்களை மறந்தது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.

Also Read:பழக்க தோஷம் மாறல, தண்டவாளத்தில் ஏறிய அட்லியின் வண்டவாளம்.. விஜயகாந்தின் இந்த படம் தான் ஜவான்

- Advertisement -