சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

செல்லும் இடமெல்லாம் விரட்டிய நபர்கள்.. மூக்குத்தி அம்மனாக மாறி முகம் சிவந்த நயன்தாரா

சினிமா நட்சத்திரமாக லைம் லைட்டில் ஜொலிப்பது பிரபலங்களுக்கு பெருமையாக இருந்தாலும் சில அசௌகரியங்களும் அவர்களுக்கு ஏற்படத்தான் செய்கிறது. அதிலும் ஹீரோயின்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அதன் காரணமாகவே சிலர் பொது இடம் என்றும் பாராமல் கோபத்தை காட்டிய சம்பவங்களும் உண்டு.

இப்படித்தான் தற்போது நயன்தாராவும் மூக்குத்தி அம்மனாக மாறி பொது இடத்தில் கோபப்பட்டு இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் நயன் இப்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதே சமயத்தில் தன் தனிப்பட்ட வாழ்க்கைக்காகவும் அவர் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தன் கணவருடன் குலதெய்வ வழிபாடுக்காக சென்ற நயன்தாரா பற்றிய செய்தி தான் இப்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Also read: 5 வருடத்திற்கு பின் மீண்டும் மிரட்ட வரும் முட்ட கண்ணு வில்லன்.. நயன்தாராவை தலை தெரிக்க ஓடவிட்ட கொடூரன்

அதாவது நேற்று அவர்கள் இருவரும் கும்பகோணம் அருகே இருக்கும் மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று இருக்கின்றனர். இதை அறிந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் அவர்களை தொடர்ந்து வந்திருக்கின்றனர். மேலும் பொதுமக்களும் அந்த பகுதியை சூழ்ந்து கொண்டு நயன்தாராவை ஆர்வத்துடன் பார்த்திருக்கின்றனர்.

இதுதான் அவர்களுக்கு சிறு அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் நயன்தாராவை நிம்மதியாக சாமி கூட கும்பிட விடாமல் பலரும் போட்டோவுக்கு போஸ் கொடுங்கள் என்று கூறியபடியே இருந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் அனைத்தையும் இன் முகத்துடன் சமாளித்து வந்த நயன்தாரா ஒரு கட்டத்தில் கோபப்பட்டு டென்ஷனாகி இருக்கிறார்.

அதன் விளைவாக அவர் பத்திரிக்கையாளர்களை பார்த்து ஐந்து நிமிடம் எங்களை சாமி கும்பிட விடுங்கள் என்று கோபத்தை அடக்கியபடி பேசி இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு நயன், விக்கி இருவரும் சென்று இருக்கிறார்கள். அங்கு முன்னெச்சரிக்கையாக கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Also read: ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு அட்லீ போட்ட கண்டிஷன்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

இருப்பினும் தரிசனம் முடித்து வெளியே வந்த ஜோடியை மீண்டும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சூழ்ந்து இருக்கின்றனர். அப்போது சிரித்த முகமாக அவர்களுக்கு கையசைத்த நயன்தாரா போட்டோவுக்கும் போஸ் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு ரயில் நிலையம் சென்ற பிறகும் கூட இளைஞர்கள் கூட்டம் செல்போனில் நயன்தாராவை போட்டோ எடுத்தபடியே இருந்திருக்கிறார்கள்.

இதனால் மீண்டும் கடுப்பான அவர் இனி இப்படி போட்டோ எடுத்தால் செல்போனை உடைத்து விடுவேன் என்று கத்தி இருக்கிறார். இதுதான் தற்போது மீடியாவில் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. நயன்தாரா கோபப்பட்டது தவறு என சிலர் கூறினாலும் தனிப்பட்ட வேலையாக வந்திருக்கும் அவரை எதற்காக தொந்தரவு செய்ய வேண்டும் என்ற ஆதரவு குரல்களும் எழுந்துள்ளது.

Also read: சமந்தா, நயன்தாரா போல ஐட்டம் நடிகை என பெயர் வாங்காத மூன்றெழுத்து நடிகை .. 20 ஆண்டுகளில் ஒரு பாட்டு கூட இல்லையாம்

- Advertisement -

Trending News