செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

விஜய், அஜித்தெல்லாம் போர், நான் நயன்தாரா டா, இனிமேல் இப்படித்தான் இருப்பேன்.. நீங்க நடத்துங்க மேடம்!

நயன்தாரா(Nayanthara) என்ற பெயரை கேட்டாலே சிலிர்த்துப் போகும் ரசிகர்கள் இருக்கும்வரை அவருக்கு தமிழ் சினிமாவில் சில்லறை கொஞ்சம் ஜாஸ்தியாகவே கிடைக்கும். அந்த அளவுக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையாக ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

முதலில் கமர்சியல் நாயகியாக வலம் வந்த நயன்தாரா சமீபகாலமாக கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். அதே சமயத்தில் முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்கத் தவறுவதில்லை.

கமர்சியல் மற்றும் கதையின் நாயகி என ஒரே நேரத்தில் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பத்து வயதைத் தாண்டி விட்டாலே மார்க்கெட் காணாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் 36 வயதாகியும் இன்னமும் தன்னுடைய சினிமா கேரியரில் நம்பர் 1 இடத்தில் ஜம்முனு அமர்ந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நயன்தாரா தற்போது அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே கொஞ்சம் கமர்ஷியல் கலந்த படங்களாக இருக்கின்றன.

இந்நிலையில் இந்த படங்களுக்கு பிறகு இனிமேல் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதே போல் இனி விஜய், அஜித், ரஜினி போன்ற எந்த ஒரு முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க மாட்டேன் என தன்னுடைய வட்டாரங்களில் கூறி வருகிறாராம் நயன்தாரா.

nayanthara-cinemapettai-01
nayanthara-cinemapettai-01
Advertisement Amazon Prime Banner

Trending News