தொடர் தோல்வியால் சரிந்த மார்க்கெட்.. மேடையில் அந்த இயக்குனரிடம் பகிரங்கமாக வாய்ப்பு கேட்ட நயன்தாரா

நடிகை நயன்தாரா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்திய சினிமாவில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். பல நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு புகழின் உச்சியில் இருந்தார். கால்ஷீட்டுகள் இல்லாத காரணத்தால் பல முன்னணி நடிகர்களின் படங்களை இவரே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு ஹீரோக்களுக்கு இணையாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

கடந்த வருடம் தன்னுடைய காதல் கணவரான விக்னேஷ் சிவனை இவர் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவின் மார்க்கெட் இறங்கு முகமாகவே இருக்கிறது. தொடர் சினிமா வாய்ப்புகளுக்கு நடுவே இருந்த நயன்தாரா தற்போது ஒரு பட வாய்ப்புக்கே பயங்கரமாக திணறிக் கொண்டிருக்கிறார்.

Also Read:திருமணத்திற்கு பிறகு தொடர் தோல்விகளை கொண்டிருக்கும் நயன்தாரா, ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நயன்தாராவுக்கு சிறந்த நடிகை என்ற விருதை கொடுத்திருக்கிறது. பெரும்பாலும் நயன்தாரா இது போன்ற விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது அரிது. அப்படியே விருது விழாக்களில் கலந்து கொண்டாலும் அங்கு எவ்வளவு பெரிய ஹீரோக்கள் இருந்தாலும் அல்லது இயக்குனர்கள் இருந்தாலும் அவர்களிடம் பட வாய்ப்பு பற்றி பேசவே மாட்டார்.

ஆனால் இந்த முறை நயன்தாராவின் நடவடிக்கையில் ரொம்பவே மாற்றம் இருந்தது. இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் கையால் சிறந்த நடிகை என்ற விருதை பெற்றுக் கொண்டார். அப்போது அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். நயன்தாரா இதுபோன்று முந்தைய விருது விழாக்களில் செய்தது கிடையாது. அதுவும் இல்லாமல் விருது வாங்கிய பிறகு இயக்குனர் மணிரத்தினத்தை பற்றி பேசினார்.

Also Read:கவர்ச்சியில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுத்த நயன்.. லீக்கான ஜவான் பட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்த அட்லி

ஏற்கனவே இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து பணிபுரிய வேண்டிய வாய்ப்புகள் தட்டிக் கழிந்த நிலையில், என்றாவது ஒரு நாள் மணிரத்தினம் படத்தில் நடித்து அந்த படத்திற்கு அவர் கையாலேயே விருது வாங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இதுதான் நடிகை நயன்தாரா முதன்முறையாக ஒரு இயக்குனரிடம் விருது விழாவின் போது வாய்ப்பு கேட்டது.

என்னதான் திருமணத்திற்கு பிறகு நான் நன்றாக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று நயன்தாரா மீடியா முன் சொல்லிக் கொண்டாலும் மார்க்கெட் சரிந்து இருப்பது என்பது அவருக்கு மிகப்பெரிய கவலையை தான் உண்டாக்கி இருக்கிறது. இதனால் தென் இந்திய சினிமாவின் டாப்பில் இருந்த நயன்தாரா இளம் ஹீரோயின்கள் போல் இயக்குனர்களிடம் வேலை செய்ய ஆசைப்படும் விருப்பத்தை மேடையிலேயே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

Also Read:ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு அட்லீ போட்ட கண்டிஷன்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

- Advertisement -