நயன்தாராவுடனான ஐந்து வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விக்னேஷ் சிவன்.. இப்பவாச்சும் தோணுச்சே!

நானும் ரவுடிதான் படம் யாருக்கு சிறப்பாக இருந்ததோ, இல்லையோ. விக்னேஷ் சிவனுக்கு செம லக்கியான படம் தான். ஆனாளப்பட்ட நயன்தாராவையே அசால்டாக உசார் செய்தார் விக்னேஷ் சிவன்.

ஆயிரம் பேர் விக்னேஷ் சிவனை இணையதளங்களில் வச்சு செய்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நான் நயன்தாரா காதலர் என்று கெத்தாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஐந்து வருடமாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒரே வீட்டில் நெருக்கமாக வசித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி வெளிநாடுகளுக்கும் காதல் சுற்றுலா சென்று வந்தனர். இதை பார்த்த பலருக்கும் வயிற்று எரிச்சல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் விக்னேஷ் சிவன் மீது கோபத்தில் இருந்தனர் என்று கூட சொல்லலாம். நயன்தாரா படப்பிடிப்புக்கு சென்று அவருடன் கூத்தடித்து தேவையில்லாமல் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்.

nayanthara-vignesh
nayanthara-vignesh

இருந்தாலும் நயன்தாரா காதலர் அல்லவா, எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள். இது ஒருபுறமிருக்க நீண்ட நாட்களாக காதல் பறவைகளாக வலம் வருவோம் என்று கூறிய விக்னேஷ் சிவன் தற்போது மனம் மாறி வருகிற பிப்ரவரி மாதம் நயன்தாராவை ரகசிய திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கடந்த 5 வருடத்தில் குறைந்தது 10 முறையாவது நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இணையதளத்தில் திருமணம் செய்து வைத்திருப்பார்கள் நம் வதந்தி பரப்பாளர்கள். இதுவும் வதந்தியா? அல்லது உண்மையில் திருமணமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்