வடிவேல் இயக்குனருடன் கூட்டணி அமைத்த நயன்தாரா.. இது வேற லெவல் காம்போ ஆச்சே!

தென்னிந்திய திரை துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவின் அதிரடியாக அடுத்தடுத்த திரைப்படங்கள். திரைப்படங்களில் கதாநாயகர்கள் மையமாக வைத்தே பெரும்பாலும் படங்கள் அமைய பெறுகின்றன பெண்கள் அழகிற்காக மட்டுமே காட்சிப்படுத்திய நிலைமாறி முதன்மையான காட்சிகளில் தோன்றி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இந்நிலையில் நயன்தாரா அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பெண்ணை மையமாக கொண்ட கதாபாத்திரமாகவே இருக்கும். ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுகமானவர் நயன்தாரா அதில் கிராமத்து பெண்ணாக அசத்தியிருப்பார்.

பின் அவருடைய நடிப்பு திறமை வேறு குணமாக திரும்பி நானும் ரவுடிதான், மூக்குத்தி அம்மன், மாயா ,அறம், ராஜா ராணி போன்ற படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர்.

nayanthara-01
nayanthara-01

தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் ,நெற்றிக்கண் ஆகிய படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறாராம். ஆனால் இப்போது வேறு சில புதிய படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வைகைப்புயல் வடிவேலு நடித்த எலி படத்தை இயக்கிய இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகி இருப்பதாகவும், ரெட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களிலும் நயன்தாரா நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் திருமணம் தள்ளிப் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -