முதன்முறையாக 45 வயது நடிகருக்கு ஜோடியாக நயன்தாரா.. இவரை எப்படி இவ்வளவு நாள் மிஸ் பண்ணாங்க!

நயன்தாரா சினிமாவுக்கு வந்த பல வருடங்களில் தற்போதுதான் முதல் முறையாக அந்த முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

நயன்தாராவின் சொந்த வாழ்க்கை எப்படி இருந்தாலும் சினிமா வாழ்க்கை எப்போதுமே உச்சத்திலேயே இருந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தற்போதைக்கு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தான்.

ஒரு படத்துக்கு ஆறு முதல் ஏழு கோடி வரை வாங்கி வருகிறார். அதேசமயம் கமர்சியல் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற அளவைகுண்டபுரம்லோ என்ற படத்தை இயக்கிய திரி விக்ரம் இயக்கத்தில் அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவராக நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். நயன்தாரா சமீபகாலமாக மற்ற மொழி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் இதுவரை மகேஷ்பாபுவுடன் நயன்தாரா நடித்ததே கிடையாதாம். இத்தனைக்கும் ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவில் உள்ள முக்கிய முன்னணி நடிகர்கள் பலருடனும் ஒன்றுக்கு இரண்டு படங்களில் ஜோடி போட்ட நயன்தாரா மகேஷ் பாபுவை மட்டும் எப்படி மிஸ் செய்தார் என்கிறது சினிமா வட்டாரம்.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -