லெஜெண்ட் அண்ணாச்சியை கடுப்பாக்கிய நயன்தாரா.. அம்புட்டு கோடி கொடுத்தும் கெத்தை காட்டிய சம்பவம்

Legend Saravanan-Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு வலம் வரும் நயன்தாரா படம் ஓடவில்லை என்றாலும் கெத்தை விட மாட்டார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. இதில் ஜவான் மட்டும் விதிவிலக்கு.

அப்படி இருந்தும் கூட நயன்தாரா தன்னுடைய மாஸ் குறையாமல் தான் இருந்து வருகிறார். இப்படித்தான் லெஜெண்ட் அண்ணாச்சி இவரை தன்னுடைய படத்தில் ஹீரோயின் ஆக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் நயன் அதற்கு சம்மதிக்கவில்லை.

அன்றைய தேதியில் அவர் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் இரண்டு கோடி. அதை அப்படியே ஐந்து மடங்காக தருகிறேன் என்று அண்ணாச்சி இறங்கி வந்திருக்கிறார். ஆனாலும் கூட இவர் 100 கோடி கொடுத்தாலும் முடியாது என்று கடுப்பேற்றி இருக்கிறார். இதனால் டென்ஷனான அண்ணாச்சி தரமான ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார்.

Also read: தூண் போல் அடுத்த படத்துக்கு அண்ணாச்சி போட்ட அஸ்திவாரம் .. அந்தப் பெயர் தான் வேணும் சரவணன் அருள் பிடிக்கும் அடம்

அதாவது நயன்தாரா குடியிருந்த லக்சூரி அப்பார்ட்மெண்ட் பிளாட் எதிரிலேயே ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். அப்போது அங்கு அவருடைய காரை நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் நயன்தாரா வீட்டு எதிரில் நிப்பாட்டி இருக்கிறார். அதை பார்த்த பலருக்கும் இவர் கார் ஏன் இங்கே நிற்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

அதன் பிறகு தான் அந்த வீடு வாங்கிய விஷயம் அதை தொடர்ந்து நயன்தாரா படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன விஷயமும் வெளிவந்திருக்கிறது. இப்படி நயன்தாரா ஒரு பக்கம் கெத்தை காட்டி மிரட்டிய நிலையில் அண்ணாச்சியும் பதிலுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

Also read: நயன்தாராவுக்கு மேல் சம்பளத்தில் கொடி கட்டி பறந்த நடிகை.. ஸ்கெட்ச் போட்டு ஆலமரம் போல் வளர்ந்த ஹீரோயின்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்