ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

லாபத்தை சம்பாதிக்க 2 யுக்தியை ஃபாலோ பண்ணும் நயன்தாரா.. இனி இங்க தல காட்ட மாட்டாங்க போல

Nayanthara: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. சம்பளத்தில் மட்டுமல்லாமல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தைக்கு அம்மாவாகி விட்டார். இருந்தாலும் பல படங்களில் ஹீரோயின் ஆக பயணித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள நயன்தாரா 2 யுத்தியை பாலோ பண்ணி வருகிறார். அதாவது இவருடைய வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்து அதன் மூலம் லாபத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இவருடைய முழு கவனம் இருக்கிறது. அந்த வகையில் தொழில் அதிபராக ஆகி லாபத்தை சம்பாதிக்கும் பிசினஸில் இன்ட்ரஸ்ட் காட்டி வருகிறார்.

அதனால் பாரம்பரிய ஹோட்டல் ஒன்றில் முதலீடு செய்து இருக்கிறார். அத்துடன் வெளிநாடுகளிலும் நிறைய தொழில் செய்து ரியல் எஸ்டேட்டுகளிலும் முதலீடு செய்து சரியான வருமானத்தை பார்த்து வருகிறார். அத்துடன் அழகு சாதன பொருளுக்கு பிராண்ட் அம்பாச்டராக இருந்து லாபத்தை சம்பாதித்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து லாபத்தை சம்பாதிக்கும் வகையில் இவருடைய கவனத்தை ஒரு பக்கம் செலுத்துகிறார். இன்னொரு பக்கம், கடைசியாக நடித்த ஜவான் படம் நல்ல வரவேற்பை பெற்று அதிக லாபத்தை கொடுத்ததால் தற்போது மறுபடியும் பாலிவுட்டிலேயே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு காரணம் நயன்தாராவிற்கு இங்கு கொடுக்கிற சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.

ஏற்கனவே ஜவான் படத்திற்கு 10 கோடி சம்பளத்தைப் பெற்றார். அந்த வகையில் இரண்டாவது முறையாக ரன்வீர் சிங் நடிக்கும் பைஜு பாவ்ரா என்ற படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கப் போகிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதனால் ஜவான் படத்தில் வாங்கின சம்பளத்தை விட அதிகமாக கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

அப்படி மட்டும் நயன்தாரா எதிர்பார்க்காத அளவிற்கு சம்பளம் கிடைத்து விட்டால் இனி தமிழ் சினிமாவில் நடிக்கிறது கஷ்டம் தான். முழுக்க முழுக்க பாலிவுட் ஹீரோயின் ஆகவே மாறி அங்கேயே இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே தற்போது தமிழ் சினிமாவில் இவரை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு த்ரிஷா வளர்ந்து விட்டார். அதனால் இனி நயன்தாரா இங்கே தல காட்ட மாட்டார் என்பது போல் தான் தெரிகிறது.

- Advertisement -

Trending News