உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட.. 8 மாதத்தில் எதிரும் புதிருமாக நிற்கும் நயன்-விக்கி

காதல் பறவைகளான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி திரை உலகில் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த சில வாரங்களாகவே இந்த ஜோடியை பற்றிய பேச்சு தான் பெரும் பரபரப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் எட்டு மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக தங்கள் திருமணத்தை நடத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து அவர்கள் வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவையே கலக்கி வந்தது. புதுமண தம்பதிகளாக வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்த இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு பிறகு தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். ஆனால் அங்கு தான் வினையே ஆரம்பித்தது.

Also read: நயன்தாராவை வைத்து அஜித்துக்கு கொடுக்கப் போகும் நோஸ்கட்.. புளியங்கொம்பை பிடித்த விக்னேஷ் சிவன்

ஏற்கனவே திருமணம், குழந்தைகள் என்று சர்ச்சைகளை சந்தித்து வந்த இந்த ஜோடி அடுத்ததாக பெரும் பிரச்சனையை சந்தித்தது. அதாவது விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். இது பரபரப்பை கிளப்பிய நிலையில் நயன்தாராவின் அடுத்தடுத்த படங்களும் தோல்வியை சந்தித்தது. அது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவனின் இந்த நிலைக்கு நயன்தாரா தான் காரணம் என்ற ரீதியிலும் பேச்சுக்கள் எழுந்தது.

ஒரு விதத்தில் அதுதான் உண்மையும் கூட. இருவரும் இயக்கம், நடிப்பு என்று வேறு வேறு பாதையில் பயணித்தாலும் அதில் இருவரின் தலையீடும் அதிகமாக இருந்திருக்கிறது. அதாவது நயன்தாரா நடிக்கும் படங்களில் விக்னேஷ் சிவனின் குறுக்கீடு சில குழப்பத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று கணவரின் வேலையிலும் நயன்தாரா அடிக்கடி தலையிட்டு வந்தார்.

Also read: அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

இப்படி ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுக்கிறேன் என்ற பெயரில் தங்களுக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டார்கள். அந்த வகையில் இப்போது அவர்களின் நிலைமை உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட என்ற அளவில் இருக்கிறது. இதுதான் இப்போது அவர்களின் குடும்பத்துக்குள் பூகம்பமாக வெடித்துள்ளது. இதனால் நயன்தாரா இப்போது ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.

என்னவென்றால் இப்போது வரை பட்டப்பாடு போதும். இனிமேல் எந்த அசிங்கமும் வேண்டாம் என்று யோசித்த நயன்தாரா சினிமாவில் இருந்து விலகும் யோசனையில் இருக்கிறார். அந்த வகையில் கைவசம் இருக்கும் படங்களை முடித்து கொடுத்துவிட்டு முழு நேர குடும்ப தலைவியாகிவிடலாம் என்று அவர் முடிவெடுத்துள்ளார். இது அவருடைய ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

Also read: ரிவெஞ் எடுத்தே ஆவேன்.. அஜித்தை தோற்கடிக்க விக்னேஷ் சிவன் போடும் கூட்டணி

Sharing Is Caring:

அதிகம் படித்தவை