உயிர் உலகை விட்டு தனியாக ரொமான்ஸ் பண்ணும் நயன் விக்கி.. வைரலாகும் புகைப்படங்கள்

Nayanthara and Vicky Latest Photos: நயன்தாரா நடிக்கும் படங்கள் வெளி வருதோ இல்லையோ, குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதாவது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தால் மட்டும் தான் சினிமாவில் தாக்குபிடிக்க முடியும். ரசிகர்களிடமும் அதிக கவனத்தைப் பெற முடியும்.

ஆனால் நயன்தாராவுக்கு இது கை கொடுக்கவில்லை. அதனால் அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும், விக்கியுடன் ரொமான்ஸ் பண்ணும் போட்டோஸ்களையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். அப்போதுதான் ரசிகர்கள் இவரை ஓரம் கட்ட மாட்டார்கள் என்பதால்.

அந்த வகையில் தற்போது நயன்தாரா இவருடைய குழந்தைகளான உயிர் உலகை விட்டு விக்கியுடன் தனியாக ரொமான்ஸ் பண்ணும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் இரண்டு பேருமே பார்ப்பதற்கு அவ்வளவு லட்சணமாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியான கணவன் மனைவிகளாகவும் தெரிகிறார்கள்.

கண்ணாலேயே ரொமான்ஸ் பண்ணும் விக்கி நயன்

nayan vicky (1)
nayan vicky (1)

அதுவும் கிட்டத்தட்ட ரெண்டு பேரும் ஒரே கலர் டிரஸ் போட்டு நயன்தாரா சேலையிலும், விக்கி வேஷ்டி சட்டையிலும் பார்ப்பதற்கு புது தம்பதிகள் போல போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

பாரம்பரியமான உடையில் நயன் விக்கி

nayan vicky
nayan vicky

அதிலும் ஒரு போட்டோவில் விக்கியை பார்த்து நயன்தாரா உனக்கு நான் இருக்கும் வரை எந்த கவலையும் வேண்டாம் என்று சொல்வது போல கண்ணாலேயே பேசுகிறார். தற்போது இந்த புகைப்படங்கள் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்