தமிழ் பாரம்பரியத்தோடு புத்தாண்டு கொண்டாடிய நயன் விக்கி.. பசங்களோடு வெளிவந்த க்யூட் போட்டோஸ்

Nayanthara : ஒரு பண்டிகைக்கும் சினிமா பிரபலங்கள் போடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் அதிகம் பெறும். குறிப்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஒவ்வொரு பண்டிகைக்கும் தவறாமல் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அதுவும் தனது இரண்டு மகன்கள் உயிர், உலக் உடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டை நயன்தாரா தனது குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.

தமிழ் பாரம்பரியத்துடன் புத்தாண்டு கொண்டாடிய விக்கி, நயன்

wikki-nayan
wikki-nayan

அதுவும் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது இரண்டு மகன்களும் தமிழரின் அடையாளமான வெட்டி சட்டை அணிந்திருந்தனர். நயன்தாரா வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்தார். இவ்வாறு தமிழ் பாரம்பரியத்துடன் புத்தாண்டு கொண்டாடி உள்ளனர்.

மேலும் இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பதிவிட்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்தப் புகைப்படம் இணையத்தில் உலாவ தொடங்கியது.

கலக்கலான விக்கி, நயன் புகைப்படம்

nayanthara-wikki
nayanthara-wikki

இந்த அழகான குடும்பம் எப்போதும் இதே மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நயன்தாரா மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து படம் எடுத்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்