நயன், அனுஷ்கா எல்லாம் காட்டுனா காட்டட்டும்.. அஜித் படத்தை தூக்கி எறிந்த அசினின் மிரட்டும் போட்டோ ஷூட் புகைப்படங்கள்

தனது 15 வயதில் மலையாள படத்தில் முதல் முதலாக நடிக்க ஆரம்பித்த நடிகை அசின் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 25 படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதிலும் இவருடைய நடிப்பில் வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதம் போன்ற படங்களில் இளசுகளை வெகுவாகக் கவர்ந்து, 90ஸ் கிட்ஸ்களில் எவர்கிரீன் கதாநாயகியாக வலம் வந்தார்.

இந்நிலையில் அசின் அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தில் கமிட் ஆகி அதற்காக போட்டோஷூட் எல்லாம் நடத்தியுள்ளார். கடைசியில் அந்தப் படத்தில் ஒரு காட்சியில் கவர்ச்சியான நீச்சல் உடையில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். உடனே அந்தப் படத்தை வேண்டவே வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டாராம்.

Also Read: ஏகே 62 வாய்ப்புக்காக போட்டி போடும் நடிகைகள்.. தீயாய் வேலை செய்யும் வாரிசு நடிகை

ஆனால் அசின் அந்த படத்திற்காக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது ட்ரண்ட் ஆகி  கொண்டிருக்கிறது. 2007-ல் வெளிவந்த பில்லா திரைப்படம் அஜித்திற்கு முக்கியமான திரைப்படம். இந்த படத்தில் நயன்தாரா பிகினி டிரஸ்ஸில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.

பில்லா படத்தை தூக்கி எறிந்த அசின்

asin-4-cinemapettai
asin-4-cinemapettai

இதன் மூலம் நயன்தாரா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு வளர்ச்சி அடைந்தார். இதே போல் இந்த கதாபாத்திரத்தை தெலுங்கில் அனுஷ்கா செய்து அவரும் அடித்து தூள் கிளப்பினார். ஆனால் தமிழில் நயன்தாரா நடிப்பதற்கு முன்னாள் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது அசின்.

Also Read: நாசுக்காக தூண்டில் போட்ட நயன்தாரா.. இயக்குனருக்கு அல்வா கொடுத்த விஜய் சேதுபதி

அதற்கான பல போட்டோ சூட் கூட நடத்தி முடித்துள்ளனர். இந்த படத்தில் பிகினி டிரஸ்ஸில் நடிக்க வேண்டும் என்பதால் அசின் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த படம் வெளியான பிறகும் அசின் இந்த படத்தில் நடித்திருக்கலாமோ என்று கொஞ்சம் கூட கவலைப்பட வில்லையாம்.

பில்லா படத்திற்காக போட்டோ ஷூட் நடத்திய அசின்

asian-3-cinemapettai
asian-3-cinemapettai

ஏனென்றால் நயன்தாரா, அனுஷ்கா காட்டிய கவர்ச்சியை ஒருபோதும் காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். எனவே சினிமாவில் கடைசி வரை குடும்ப குத்து விளக்காகவே இருந்த அசின், 16 வருடங்களுக்கு முன் பில்லா படத்திற்காக எடுத்த பல புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பில்லா படத்திற்காக எடுத்த புகைப்படங்கள்

asin-1-cinemapettai
asin-1-cinemapettai

Also Read: உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட.. 8 மாதத்தில் எதிரும் புதிருமாக நிற்கும் நயன்-விக்கி

Sharing Is Caring:

அதிகம் படித்தவை