இந்திய அளவிலான டாப்-10 சேனல்கள்.. முதல் இடத்தை பிடித்த சன் டிவி! பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி

சமீபத்தில் இந்திய தொலைக்காட்சிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அதில் எதிர்பாராதவிதமாக தமிழ் தொலைக்காட்சியான சன் டிவி இந்திய அளவிலான தொலைக்காட்சிகள் உடன் போட்டி போட்டு தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்து தமிழ் தொலைக்காட்சிகளுக்கு பெருமை தேடித் தந்துள்ளது.

மீண்டும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு சன் டிவிக்கு கிடைத்த அங்கீகாரம் சின்னத்திரை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்கள் டப் கொடுத்து வந்தனர். மேலும் இவற்றிற்கிடையே கடுமையான போட்டியும் நிலவியது.

ஒரு கட்டத்தில் சன்டிவி ஓரங்கட்டப்பட்டு மற்ற சேனல்கள் முதலிடத்தையும் பிடித்து, மக்களின் மனங்களையும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் சீரியல்கள் மூலம் கவர்ந்தன.

ஆனால் மீண்டும் முயற்சி செய்து சன் டிவி மக்களுக்கு பிடித்த பல சீரியல்களையும், பல ரியாலிட்டி ஷோ களையும், பல சூப்பர் ஹிட் புதிய திரைப்படங்களையும் வைத்து மீண்டும் தன் இடத்தை பிடித்து தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டது.

top 10 channels-cinemapettai
top-10-channels-cinemapettai

அதிலும் இந்திய அளவில் மற்ற மொழி சேனல்களையும் பின்னுக்குத்தள்ளி சன்டிவி மாபெரும் சாதனையை படைத்துள்ளது. எப்பொழுதும் தமிழ் தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஸ்டார் விஜய் தற்பொழுது டாப்-5 லிஸ்டில் கூட வரவில்லை.

மேலும் இந்திய அளவிலான தரவரிசை பட்டியலில் 6வது இடத்தை பிடித்து ஸ்டார் விஜயும் தமிழ் தொலைக்காட்சிக்கு பெருமை தேடித் தந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.