ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா வெற்றி கண்ட 5 படங்கள்.. விஜய்க்கு ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்த வாரிசு

இந்தியாவில் நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இவர் நடித்த கன்னட காதல் நகைச்சுவையான “கிரிக் பார்ட்டி” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் சாதனை செய்த திரைப்படமாக ஆனது. இப்படி இவர் நடித்து வெற்றி பெற்ற ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

கீதா கோவிந்தம்: பரசுராம் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு கீதா கோவிந்தம் தெலுங்கு திரைப்படமாக வெளிவந்தது. இதில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, சுப்புராஜு ஆகியோர் நடித்தார்கள். இப்படம் காதல் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றிய பெற்றது. இதில் கல்லூரி விரிவுரையாளராக கீதா என்ற கேரக்டரில் ராஸ்மிகாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

Also read: வீட்டுப் பணியாளர் காலில் விழுந்த ராஷ்மிகா.. எக்ஸ்பிரஸ் குயினின் பரபரப்பான பேட்டி

புஷ்பா: சுகுமார் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு புஷ்பா தெலுங்கு திரைப்படமாக வெளிவந்தது. இதை இந்தி, தமிழ், கன்னட, மலையாள ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் அல்லு அர்ஜுன் உடன் காதலில் விழும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்திருப்பார். இப்படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக ஆனது.

வாரிசு: வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வாரிசு திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றிருக்கிறார். இப்படம் அதிக வசூல் செய்த திரைப்படம் ஆக வெளிவந்தது.

Also read: வளர்த்துவிட்டவரை மதிக்காத ராஷ்மிகா.. நச்சென்று பதில் கொடுத்த வெற்றி பட இயக்குனர்

சுல்தான்: பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு சுல்தான் திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் ஆகும். இவர் நடித்த முதல் படத்தின் மூலமே மிகவும் பிரபலமாகிவிட்டார். இப்படத்தில் ஒரு கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சீதா ராமம்: ஹனு ராகவபுடி இயக்கத்தில் கடந்த வருடம் சீதா ராமம் தெலுங்கு திரைப்படமாக வெளிவந்தது. இதில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படம் அந்த காலத்து காதல் படமாக எடுக்கப்பட்டிருக்கும். இதில் ராஷ்மிகா, சீதாவை தேடி அவரது கதையை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்பும் அஃப்ரீனின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. மேலும் இது விமர்சகர்கள் மற்றும் பார்வையர்களால் பாராட்டப்பட்டது.

Also read: ஓவர் மெதப்பில் இருக்கும் ராஷ்மிகா.. அடிச்சு துரத்திய பிரம்மாண்ட இயக்குனர்

- Advertisement -

Trending News