ஸ்ரீதேவியைப் புகழ்ந்து தள்ளிய பிரபலம்.. நடிகைகளில் ஒரு சிலர் தான் இப்படி உள்ளனர்

தமிழில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சதுரங்க வேட்டை இப்படத்தில் நட்டி எனும் நட்ராஜின் நடிப்பை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. இப்படி எல்லோருக்கும் நடிகராக தெரிந்த நட்டி ஒரு ஒளிப்பதிவாளரும் கூட.

இவர் சமீபத்தில் சாய் வித் சித்ரா என்கிற நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணனுடன் கலந்துரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நட்டியின் ஆரம்பகாலம் பற்றி பல்வேறு கேள்விகளுடன் கலநதுரையாடிய சித்ரா லட்சுமணன் புலி படம் பற்றி சில கேள்விகளை கேட்டிருந்தார்.

அப்படியாக கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார் நட்டி. அதில் நடிகை ஸ்ரீதேவியுடன் களத்தில் இருந்தது குறித்து பெருமையாக கூறியிருந்தார்.

karnan-natty
karnan-natty

அப்படியாக பேசுகையில் நடிகை ஸ்ரீதேவி ஏதோ முதல் படத்தில் நடிக்கும் அறிமுக நடிகை போல அத்தனை மெனக்கடுவார் என்றும் யாரும் அவருக்காக காத்திருப்பதை விரும்ப மாட்டார் என்றும் கூறினார்.

மேலும் படத்தை கொஞ்சம் மாஸ் படமாகவும் தளபதி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதற்காகவே சிரமப்பட்டு உருவாக்கியதாகவும். குடும்பங்கள் குழந்தைகள் கொண்டாடும் வகையில் கதையில் இன்னும் சில விடயங்களை சேர்த்திருந்தால் படம் இன்னும் ஓடி இருக்கலாம் என்றும் கூறினார்.

மேலும் தான் நடித்த படத்திற்காக தல அஜித் குமார் பாராட்டியதாகவும். இதுவே அவருக்கு நடிகராய் கிடைத்த முதல் பாராட்டு என்றும் தொடர் வெற்றிகளை தேட வைத்ததாம்.

- Advertisement -