இந்த 2 படங்களின் தழுவல் தான் நானே வருவேன்.. இப்பவே வரும் நெகட்டிவ் ரிவ்யூ

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கதை எழுதி நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 29 அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

இதற்கு முன்னரே படத்தில் தனுஷின் நடிப்பு குறித்தும், கதை குறித்தும் தயாரிப்பாளர் ஆகா ஓகோ என்று புகழ்ந்திருந்தார். அதுவே இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் ட்ரெய்லர் வெளியான பிறகு அதில் பல திரைப்படங்களின் சாயல் இருப்பது ரசிகர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

Also read:மணிரத்னத்துடன் நேருக்கு நேராக மோதும் செல்வராகவன்.. யாரும் எதிர்பாராத சிக்கலில் மாட்டும் தனுஷ்

வழக்கம் போல அதில் தனுஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும் கதை இதுதான் என்று முன்னரே யூகிக்கும் படி தான் ட்ரைலர் இருந்தது. அந்த வகையில் தற்போது நானே வருவேன் இந்த இரண்டு படங்களின் காப்பி தான் என்று கூறப்படுகிறது. அது என்ன படங்கள் என்பதை இங்கே காண்போம்.

ஆளவந்தான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் கதை எழுதி நடித்த இந்த படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது. கமல் இரு வேடங்களில் நடித்த இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் வில்லனாக காட்டப்பட்டிருக்கும். அதிலும் முரட்டு உடல், மொட்டை தலை என்று பார்ப்பதற்கே மிரட்சியாக இருக்கும் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதே போன்று தான் நானே வருவேன் திரைப்படத்திலும் தனுஷின் ஒரு கேரக்டர் மீசையில்லாமல் கொஞ்சம் வளர்ந்த தலைமுடியுடன் வில்லத்தனம் செய்கிறது. மற்றொரு கேரக்டர் குடும்பம், மனைவி, குழந்தை என்று இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

Also read:கதை கேட்டு மிரண்டு ஓடிய தனுஷ்.. தம்மாத்துண்டு இருக்கிற நான் எப்படி டானா?

வாலி எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதில் அஜித் அண்ணன் தம்பி என்ற இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதில் அண்ணன் கதாபாத்திரம் கொடூர வில்லத்தனமாக காட்டப்பட்டு இருக்கும்.

அதேபோன்றுதான் தற்போது நானே வருவேன் திரைப்படம் இருப்பதாக பட குழுவில் உள்ள ஆட்களே தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் இதன் ட்ரெய்லர் ஆளவந்தான் திரைப்படம் போன்று இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வாலி திரைப்படத்தின் கதையும் இதில் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Also read:கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த லோகேஷ் பட நடிகர்.. அட அவரு அதிரடி ஆளாச்சே!