ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ட்ரெய்லர் ரிலீஸ் தேதி உடன் வந்த நந்தினி.. இணையத்தில் ட்ரெண்டாகும் ஐஸ்வர்யா ராய் புகைப்படம்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பிரமிக்க செய்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா மட்டுமே பொருந்துவார் என ரசிகர்களை ஆணித்தரமாக நம்ப வைத்து விட்டார் ஐஸ்வர்யா. அந்தளவுக்கு கம்பீரத்துடன் கனகச்சிதமாக நடித்திருந்தார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸுகாக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்களின் போஸ்டர் தினமும் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. மேலும் சமீபத்தில் அகநக பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

Also Read : 18 மொழியில் தயாராகும் ஜெயம் ரவி படம்.. பொன்னியின் செல்வனுக்கு பிறகு பிரம்மாண்ட படத்தில் இணைகிறார்

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா போன்றோரின் புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்ரைலர் ரிலீஸ் தேதி உடன் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்துள்ளது.

மேலும் முதல் பாகமே நல்ல வசூலை பெற்று தந்த நிலையில் இரண்டாம் பாகம் இரட்டிப்பாக வசூல் செய்யும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. இந்நிலையில் லைக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பொன்னியின் செல்வன் நந்தினி கதாபாத்திரத்தின் போஸ்டருடன் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

Also Read : ஜெயம் ரவி பிசியாக நடித்து வரும் 7 படங்கள்.. பொன்னியின் செல்வனால் அடித்த சுக்கிர திசை

ஏப்ரல் மாதம் படம் வெளியாக உள்ள நிலையில் இப்போதே படத்திற்கான பிரமோஷன் வேலைகளும் தொடங்கிவிட்டது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பினால் இரண்டாம் பாகத்தில் நிறைய மாற்றங்கள் மணிரத்தினம் செய்துள்ளாராம்.

ponniyin-selvan-aishwarya-rai

Also Read : பக்கா மெலடி சாங்.. வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் அக நக பாடல் க்ளிம்ப்ஸ்

- Advertisement -

Trending News