பிக்பாஸில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய நமிதா.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா.?

திருநங்கை நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறினார். அவர் வெளியேறுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது உண்மை காரணம் தெரிய வந்துள்ளது.

நமிதா வெளியேறுவதற்கு முதல் நாள் தாமரைச்செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளை நாம் பார்த்தோம். இந்த சம்பவம் தான் நமிதாவின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

தாமரைச்செல்வி சிரித்ததை தவறாக புரிந்துகொண்ட நமீதா அன்றைய நாள் முழுவதும் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்.  வீட்டில் உள்ள அனைவரும் சமாதானப்படுத்தியும் அவர் சமாதானம் ஆகவில்லை.

மன அழுத்தம் காரணமாக ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் பிக்பாஸ் ரெக்கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது தவிர அவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடிக்க இருந்த போது படப்பிடிப்புக்கு வராமல் இருந்துள்ளார். இதைக் கேட்ட புரொடக்ஷன் மேனேஜரை அவர் அடித்துள்ளார்.

இது தயாரிப்பாளர் சங்கம் வரையில் சென்று அவருக்கு சினிமாவில் நடிக்க தடை விதித்து ரெட் கார்டு கொடுத்துள்ளனர். அவருடைய தாழ்வு மனப்பான்மையின் காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

namitha-bigg-boss
namitha-bigg-boss
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்