27 வருடம் கழித்து மீண்டும் நாகேஷ் உடன் ஜோடி போட்ட மனோரமா.. இந்த படத்தில் நீங்க கவனிச்சீங்களா.!

தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர்களில் வரிசையில் இடம் பிடித்துள்ளார் நாகேஷ் மற்றும் மனோரமா. இவர்கள் இருவரும் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். ஒரு காலத்தில் இவர்களது காமெடிக்காக மட்டுமே படங்கள் ஓடின. அந்த அளவிற்கு தனக்கென தனி ரசிகர்கள் வைத்திருந்தனர்.

அப்போதெல்லாம் இயக்குனர்கள் பலரும் நடிகர்களின் கால்ஷீட் வாங்குவதைவிட நாகேஷ் மற்றும் மனோரமாவின் கால்ஷீட்டுக்காக அதிகம் காத்திருப்பார்கள். அந்த அளவிற்கு பல படங்களில் இவர்கள் பிசியாக நடித்து வந்தனர். மேலும் இவர்கள் நடிப்பதற்காக பல நடிகர்களும் காத்திருந்த காலங்கள் உண்டு. அந்த அளவிற்கு சினிமாவில் வலம் வந்தனர்.

தனித்தனியாக படங்கள் நடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இவர்கள் இருவரும் மட்டுமே அனைத்து நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். அந்த அளவிற்கு அப்போது ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தனர்.

இவர்கள் இருவரும் 1979ஆம் ஆண்டு கடைசியாக நாடகமே உலகம், ஞானக்குழந்தை மற்றும் நல்லதொரு குடும்பம் ஆகிய படங்களில் நாகேஷ் மற்றும் மனோரமா இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் பல படங்கள் நடித்திருந்தாலும் ஜோடியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

vadivelu-pulikesi
vadivelu-pulikesi

2006 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளியான 23ம் புலிகேசி படத்தில் நாகேஷ் மற்றும் மனோரமா, இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்தனர். கிட்டத்தட்ட 27 வருடம் கழித்து மீண்டும் நாகேஷ் உடன் ஜோடி சேர்ந்தார் மனோரம்மா அதாவது பிளாஷ்பேக் காட்சிகளில் நாகேஷ் இந்த படத்தில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலை நகைச்சுவையாக வெளிப்படுத்திய இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்