வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

எல்லோரைப் போல் நாகேஷ்க்கும் வந்த ஆசை.. அதிர்ஷ்டத்தை பயன்படுத்தாமல் விட்ட சோகம்

நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷுக்கு இணையான காமெடி நடிகரை தற்போது வரை தமிழ் சினிமா பார்த்ததில்லை. அப்போதைய காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் முதலில் நாகேஷின் கால்ஷீட் வாங்கிய பிறகுதான் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வார்கள்.

அவ்வாறு நாகேஷ் ஒரு படத்தில் நடித்தால் அந்த படத்தின் வெற்றி 90 சதவீதம் உறுதி என எம்ஜிஆர் ஒரு முறை சொல்லியுள்ளார். மேலும் நாகேஷ் நடிப்பை தாண்டி நடனத்திலும் சிறந்த விளங்கக் கூடியவர். அதேபோல் அவரது மகன் ஆனந்த் பாபுவும் நடனத்தில் தனி பாணியை உருவாக்கினார்.

இவர் முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். எல்லோர் போலவும் நாகேஷும் படத்தை இயக்கலாம் என்று ஆசைப்பட்டு தனது மகனுக்காக “பார்த்த ஞாபகம் இல்லையோ” என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் ஆனந்த்பாபு, ரம்யா கிருஷ்ணன், ராதாரவி மற்றும் பலர் நடிக்க எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்துயிருந்தார்.

இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு லாபத்தை பெற்று தந்தது. ஆனால் இந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி நாகேஷ் அடுத்தடுத்த படங்களை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நாகேஷ் தனது வாழ்நாளில் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற இந்த ஒரு படத்தை மட்டும்தான் இயக்கியிருந்தார்.

அதன்பிறகு முழுமையாக நாகேஷ் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் அவரது மகன் ஆனந்த்பாபு புதுவசந்தம், சேரன் பாண்டியன், வானமே எல்லை போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இரு நடிகர்களின் படங்களில் தான் ஆனந்த் பாபு நடித்து இருந்தார்.

ஆனால் நாகேஷுக்கு கிடைத்த அளவுக்கு அங்கீகாரம் ஆனந்த்பாபுக்கு கிடைக்கவில்லை. இதனால் ஆனந்த்பாபு சிறுது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

Trending News