விவாகரத்தை மறந்து காதல் மனைவியை தேடி சென்ற நாக சைதன்யா.. விரைவில் வரப்போகும் குட் நியூஸ்

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யா, சமந்தாவை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்வில் சில பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் காரணமாக இவர்கள் இருவரும் விருப்பப்பட்டு விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் தங்கள் படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். இந்நிலையில் சமந்தா சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அரியவகை நோய் பற்றி தெரிவித்து இருந்தார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் கஷ்டங்கள் பற்றியும் மனம் உருகி தெரிவித்திருந்தார்.

Also read:பெரிய நடிகர்களை குத்தி கிழிச்ச சமந்தா.. அடுத்தவங்க உழைப்பில் கிடைக்கும் புகழ் தேவை இல்ல

அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் சமந்தாவுக்கு ஆறுதலை கூறி வந்தனர். மேலும் கூடிய விரைவில் சமந்தா இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர். அவரின் இந்த அறிவிப்புக்கு பிறகு அவருடைய கொழுந்தனார் அதாவது நாகச் சைதன்யாவின் சகோதரர் அகில் ஆறுதல் கூறியிருந்தார்.

இதைப் பார்த்த பலரும் நாகச் சைதன்யா, சமந்தாவுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இது பற்றி எந்த கருத்தையும் நாக சைதன்யா தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் ஒரு பிரச்சனை எல்லாம் மறந்துவிட்டு தன் காதல் மனைவியை தேடி சென்றுள்ளார். இந்த செய்தி தான் தற்போது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read:சமந்தா போல் நோயால் பாதிக்கப்பட்ட விஜய் டிவி பிரபலம்.. ஆறுதல் சொல்லி ஆச்சரியப்பட வைத்த சம்பவம்

பல மாதங்களாக ஒருவரை ஒருவர் பார்க்காமல் பிரிந்து இருந்த இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்து பேசி இருக்கின்றனர். அந்த வகையில் நாக சைதன்யா சமந்தாவின் உடல்நிலை பற்றி கேட்டதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளையும் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிடுவது பற்றியும் அவர்கள் பேசி இருக்கின்றனர்.

அதனால் கூடிய விரைவில் அவர்கள் இணையும் அந்த சந்தோஷமான செய்தி அறிவிக்கப்படும் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இந்த செய்தி தற்போது அவர்களுடைய ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. அவர்கள் சேரப் போகும் அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also read:பிரின்ஸ் பட தோல்விக்கு முக்கியமான ஐந்து காரணங்கள்.. சமந்தாவைப் போல் இயக்குனருக்கு வந்த அரிய வகை நோய்

- Advertisement -