தனுஷ், செல்வராகவனின் “நானே வருவேன்” பட புதிய டைட்டில் இணையத்தில் லீக்.. செம மாஸா இருக்கே!

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் என்ற படம் உருவாக இருப்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைகிறது.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர். மேலும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதால் படத்தின் விளம்பரமும் படுபயங்கரமாக இருக்கும் என எதிர்பார்த்தனர்.

மேலும் நானே வருவேன் படத்தலைப்பும் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் தனுஷ் தரப்பில் இருந்து நானே வருவேன் படத்தின் டைட்டிலை மாற்றும்படி செல்வராகவனுக்கு செய்தி சென்றுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதற்கான முதல் கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து வந்த நேரத்தில் திடீரென தனுஷ் தலைப்பை மாற்ற சொன்னது செல்வராகவனுக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்துள்ளது.

செல்வராகவன் கதைக்கு ஏற்ற இந்த டைட்டிலை மிகவும் விருப்பப்பட்டு வைத்தாராம். ஆனால் தற்போது அதை மாற்றச் சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள் செல்வராகவன் வட்டாரங்கள். மேலும் தயாரிப்பு தரப்பும் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை.

இந்நிலையில் “நானே வருவேன்” படத்திற்கு புதிதாக ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. முன்னதாக வைத்திருந்த தலைப்பை விட ராயன் மாஸாக இருக்கிறது என தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

naane-varuven-cinemapettai
naane-varuven-cinemapettai

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -