நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அரங்கேறிய அதிரடி டுவிஸ்ட்.. பிரம்மிப்பூட்டும் ப்ரோமோ!

விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக அனைவரும் பக்கி கொண்டிருக்கும் சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலின் சீசனின் இரண்டாம் பாகத்தில் பிரபல சீரியல் நடிகர் செந்தில் குமார், மாயன் மற்றும் மாறன் என்ற இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதா கதாநாயகியாக மஹாலஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் தினம்தோறும் 7 மணிக்கு ஒளிபரப்பாகும் அந்த சீரியலில் தற்போது குலதெய்வ வழிபாடு டிராக் ஓடிக்கொண்டிருக்கிறது.

எனவே மாயன் குடும்பம் மற்றும் மாறன் குடும்பம் என இரண்டு குடும்பங்களாக உள்ள நிலையில் சாமியின் புடவை யாருக்கு கிடைக்கப் போகிறது என்பதுதான் தப்போது நிகழும் பரபரப்பான கதைக்களம்.

இதில் மாறன் பல்வேறு சூழ்ச்சிகளை நிகழ்த்தி தன்னுடைய அம்மாவிற்கு சாதகமாகவே பல்வேறு முடிவுகளை நிகழ்த்தியுள்ளார். கடைசியாக சாமியின் புடவையை, எந்த அம்மா கையில் சாமி கொடுக்க உள்ளார் என்பதே இயக்குனர் வைத்துள்ள உச்சகட்ட டுவிஸ்ட்.

nini-serial-cinemapettai
nini-serial-cinemapettai

இந்த டுவிஸ்ட்-இல் எதிர்பாராத விதமாய் மாறன் மீது நிஜமாகவே சாமி வர, அவர் அந்தப் புடவையை நாச்சியார் அம்மாவிடம் கொடுத்தது பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவை பார்த்ததும், ‘நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைக்கும்’ என்பதே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்களின் எண்ண ஓட்டம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்