பாமர மக்கள் தான் டார்கெட்.. மோசடி புகாரில் சிக்கிய My V3 Ads, முழு ரிப்போர்ட்

My V3 Ads: எதையாவது பண்ணி சீக்கிரமா முன்னேறிடணும்னு சூரியவம்சம் சின்ராசு மாதிரி யோசிக்கிற மக்கள் இங்கு அதிகம். அதை உபயோகப்படுத்தி பல மோசடி வேலைகளை செய்யும் நிறுவனங்களும் அதிகம். இப்படி ஏகப்பட்ட பண மோசடி புகார் பற்றிய செய்திகளை நாம் தினமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

அந்த வகையில் தற்போது பாமர மக்களை டார்கெட் செய்து மோசடி செய்வதாக My V3 Ads என்ற நிறுவனத்தின் மீது புகார் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் திரண்டதால் தற்போது தமிழகம் பரபரப்பாகி இருக்கிறது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தங்களிடத்தில் முதலீடு செய்தால் கை நிறைய வருமானம் பார்க்கலாம் என்று விளம்பரப்படுத்தி வருகிறது. அதன்படி இந்த நிறுவனத்தில் ரூ.360-ல் தொடங்கி 1,21,000 வரை பணம் செலுத்தி உறுப்பினராகும் திட்டமும் இருக்கிறது.

Also read: விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் இதுதான்.. திராவிடத்தை ஆட்டம் காண வைக்க வரும் தளபதி

அதில் ஏதாவது ஒரு பிளானை ஆக்டிவேட் செய்து மக்கள் அதன் மூலம் ஒரு நாளைக்கு 5 முதல் 1800 வரை சம்பாதிக்க முடியும். இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருக்கின்றனர். தமிழ்நாடு தவிர கேரளா, ஆந்திரா போன்ற இடங்களிலும் இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

மேலும் கூகுள் பிளே ஸ்டோர் ஆப் ல் இந்த நிறுவனத்தின் செயலியை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்திருக்கின்றனர். இப்படி சிறிது சிறிதாக வளர்ந்து வரும் இந்நிறுவனம் மக்களை ஏமாற்றுவதாக பாமக கட்சியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் புகார் கொடுத்திருக்கிறார்.

அதை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததால் உறுப்பினராக இருக்கும் மக்கள் ஒன்றாக திரண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம் நாங்கள் அதிக அளவில் பயன் பெற்று வருகிறோம்.

Also read: அரசியல் அழுத்தத்தால் தடுமாறும் இயக்குனர் ஷங்கர்.. ஏட்டிக்கு போட்டியாக ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் ஹீரோ

இது பொய்யான வழக்கு. அரசியல் சூழ்ச்சி தான் இதற்கு முக்கிய காரணம் என மக்கள் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த கூட்டத்திற்கு வரவில்லை என்றால் மெம்பர்ஷிப் நிறுத்தப்படும், வருமானம் வராது என அழுத்தம் கொடுக்கப்பட்டதால்தான் மக்கள் திரண்டுள்ளதாகவும் மற்றொரு புகார் எழுந்துள்ளது. ஆக மொத்தம் ஏமாறுபவர் இருக்கும் வரை இப்படிப்பட்ட மோசடி நடக்கும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்