தளபதி 67-ல் வில்லனாக நடிக்க மறுக்கும் மிஷ்கின்.. காரணம் கேட்டு விழி பிதுங்கிய லோகேஷ்

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தை விட லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இணைய உள்ள தளபதி 67 படத்தை பற்றி தான் ரசிகர்கள் பெரிதும் பேசி வருகிறார்கள். இதற்கு காரணம் இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் தான்.

விஜயின் கேரியரில் மிக முக்கியமான படமாக மாஸ்டர் படம் அமைந்தது. அதேபோல் கமல்ஹாசனுக்கு சிறந்த கம்பேக் படமாக விக்ரம் படத்தை லோகேஷ் கொடுத்திருந்தார். அடுத்ததாக மீண்டும் ஒரு சம்பவம் செய்ய உள்ளார் லோகேஷ் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : பயத்தை காட்டிய தளபதி, லோகேஷ் காம்போ.. அடுத்தடுத்து வில்லனாக நடிக்க மறுக்கும் 4 டாப் நடிகர்கள்

இந்நிலையில் தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் என்று கூறப்படுகிறது. இதில் பிரித்விராஜ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் ஒப்பந்தமாகி பின்பு கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகி விட்டனர். ஆகையால் தற்போது வரை சஞ்சய் தத், விஷால், மிஷ்கின், நிவின் பாலி ஆகியோர் உறுதிப்பட வில்லன்கள் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது இயக்குனர் மிஷ்கினும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். அதாவது தளபதி 67 படத்தில் அவருக்கு 30 நாள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாள் கால்ஷீட் கொடுத்தால் அடுத்த படத்திற்கான வேலை கெட்டுவிடும் என மிஷ்கின் கூறியுள்ளார்.

Also Read : வசூல் வேட்டையாட தொடர்ந்து 6 நாட்களை லாக் செய்த லோகேஷ்.. பண்டிகை நாளை குறி வைக்கும் தளபதி 67

ஆனால் காரணம் அது கிடையாது. அதாவது சஞ்சய் தத் மற்றும் விஷால் ஆகியோருக்கு கீழே மிஷ்கின் வில்லனாக நடிப்பது அசிங்கம் என நினைத்துக் கொண்ட விலகி விட்டார். ஏற்கனவே விஷாலுடன் இவர் நடிக்க எப்படி ஒத்துக் கொண்டார் என்ற பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

ஆனால் தற்போது அவரே இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். தொடர்ந்து விஜயின் தளபதி 67 படத்தில் இவ்வாறு விலனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் விலகி வருவதால் லோகேஷ் இடமிருந்து முறையான அறிவிப்பு வந்தால் மட்டுமே ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து மீள முடியும். அதுவரை இப்படி நிறைய பெயர்கள் இந்தப் படத்தில் நடிப்பதாக பேசப்பட்ட தான் வரும்.

Also Read : பாலிவுட் கான் நடிகரை இயக்கப்போகும் லோகேஷ்.. தீயாக பரவிய போஸ்டரால் பரபரப்பான கோலிவுட்

- Advertisement -