வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இவங்க ரெண்டு பேர் சாயலில் தான் என் நடிப்பு இருக்கும்.. உண்மையை உளறிய சிவகார்த்திகேயன்

தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன்,தற்போது மாவீரன் படத்தில் மும்முரமாய் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் தனது கேரியரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலும் வென்றார். அதன் பின்பு விஜய் டிவியில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்த சிவகார்த்திகேயன், தனது திறமையால் வாய்ப்பு கிடைத்து தற்போது ஹீரோவாக வளம் வருகிறார்.

அப்படி சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் திறமையில் ஒன்று தான் மிமிகிரி ஆர்ட்டிஸ்ட். எந்த நடிகரை போல பேச சொன்னாலும் பேசி கைத்தட்டல்களை வாங்குவார். அதிலும் முக்கியமாக சூப்பர்ஸ்டாரின் குரலில் பேசி நூற்றுக்கணக்கான மேடைகளில் கைத்தட்டல்களை வாங்கி குவித்த சிவகார்த்திகேயன், ஒரு முறை விருது மேடையில் ரஜினிகாந்தின் அருகிலேயே நின்று அவரை போல பேசி ரஜினியையே மெய்சிலிர்க்க வைத்தார்.

Also Read: பல பேர் கெஞ்சியும் வழிவிடாத ரஜினிகாந்த்.. இன்று வரை ஏக்கத்தில் இருக்கும் திரையுலகம்

ரஜினிகாந்தின் உடல் மொழியை அச்சு அசலாக தனது நடிப்பிலும் சில காட்சிகளில் எடுத்து கொண்டு நடிக்கும் சிவகார்த்திகேயன் மீது பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் தற்போது நடிகர் விஜய் சாயலில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக அவரது ரசிகர்களே இணையத்தில் ட்ரெண்டாக்கினார்கள். இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் சிவகார்த்திகேயனிடம் கேள்விக்கேட்டார்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் நான் ரொம்ப ஈர்க்கப்பட்ட மனிதர் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் . பல ஆயிரக்கணக்கான மேடைகளில் அவரை போல பேசி பல பெயர் புகழை வாங்கியுள்ளேன். இதன் காரணமாக கூட நான் நடிக்கும் சில காட்சிகளில் உங்களால் ரஜினி சார் பாணியை பார்க்க முடிகிறது என்று தெரிவித்தார்.

Also Read: அஜித்தை பார்த்து ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன்.. முழு வீச்சில் செக் வைக்கும் மனைவி

மேலும் பேசிய அவர் ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் உண்டு. ஆனால் எனது நடிப்பில் ரஜினிகாந்தின் சாயலை நானே உணர்கிறேன் என வெளிப்படையாக பேசிய சிவகார்த்திகேயன், விஜயை போன்ற சாயலில் நான் நடிக்கிறேனா என்பது தனக்கு தெரியவில்லை என்றும் பார்ப்பவர்ளுக்கு அப்படி உள்ளது என்றால் அது அவர்களுடைய கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தூணாக விளங்கும் நடிகர் விஜயே, ரஜினிகாந்தின் பாணியில் சில படங்களில் நடித்ததுண்டு. ஏன் மற்ற நடிகர்களே அவரது ஸ்டைலை காப்பியடித்த சம்பவங்களும் உண்டு. அப்படி சிவகார்த்திகேயனும் ரஜினியின் சாயலில் தனது நடிப்பு இருப்பதை மகிழ்ச்சியுடன் உணர்வதாக தெரிவித்துள்ளது ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

Also Read:  அந்த காட்சியில் நடிக்க பயந்த ரஜினிகாந்த்.. பல வருடங்களுக்கு பின் ரகசியத்தை உடைத்த இயக்குனர்

- Advertisement -

Trending News