இசையை மையமாக கொண்டு உருவாகிய 6 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்கள்

தமிழ்சினிமாவில் திரில்லர், காமெடி, ஆக்ஷன் வரிசையில் இசையை மையமாக வைத்து வந்த சில படங்கள் ஹிட்டாகி உள்ளது. அந்த படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.

முகவரி

தல அஜித், ஒரு மிடில் கிளாஸ் பையன் தனது இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுக்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை தத்ரூபமாக நடித்துக் காட்டினார். வெற்றி பெற்ற முகவரி படத்தை Vz. துரை இயக்கினார். இந்தப் படம் அஜித் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.

டூயட்

பிரபு மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகிய இருவரும் உடன்பிறப்புகள் ஆக இருந்து ஒரே பெண்ணின் மீது காதல் வயப்பட்டு பின்னர் அவர்களுக்குள் ஏற்படும் மோதலை சுவாரசியமாக படமாக்கியிருப்பார் கே பாலச்சந்தர். அவர்கள் இருவருமே இசைக் கலைஞர்களாக இருப்பது இந்த படத்தில் சிறப்பு. இந்த படம் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தது.

மொழி

பிரித்விராஜ் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் இணைந்து ராதாமோகன் இயக்கத்தில் கலக்கி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த படம். ஜோதிகா காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அந்தப்படத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் டீமில் கீபோர்டு வாசிக்கும் நபர்களாக பிரித்விராஜ் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் நடித்திருப்பார்கள்.

பாய்ஸ்

ஷங்கர் இயக்கத்தில் கிட்டத்தட்ட அடல்ட் மூவி ரேஞ்சுக்கு தர லோக்கலாக இறங்கி அதே சமயத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்தான் பாய்ஸ். சித்தார்த், பரத், ஜெனிலியா, இசையமைப்பாளர் தமன் என அனைவரும் இசையில் பெரிய ஆளாக வேண்டும் என்ற போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த படம்.

இசை

நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ் ஜே சூர்யா மீண்டும் இயக்குனர் மற்றும் நடிகராக அவதாரம் எடுத்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்த படம் இசை. இந்த படத்தில் இசையமைப்பாளர் ஒருவரின் அஸிஸ்டன்டாக இருந்து பின்னர் நம்பர்-1 இசையமைப்பாளராக மாறிய பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனைகளை எதார்த்தமாக கூறியிருப்பார். சத்யராஜ் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சர்வம் தாள மயம்

டைரக்டர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இசையை மையமாகக் கொண்டு உருவாக்கிய படம்தான் சர்வம் தாள மயம். ஜிவி பிரகாஷ் மிருதங்க வாசிப்பாளராக நடித்திருப்பார். இந்த படத்தின் கதை என்னவென்றால் மிருதங்கம் வாசிப்பாளராக இருக்கும் ஐயர் ஒருவரிடம் கிறிஸ்டியன் கூட்டத்தை சேர்ந்த இளைஞர் மிருதங்கம் வாசிக்க கற்றுக் கொண்டு கச்சேரி அரங்கேற்றுவதை போல் அமைந்திருக்கும். இந்த படம் ஜிவி பிரகாஷுக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. பாக்ஸ் ஆபிஸிலும் போதுமான வசூலை பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்