நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.. தொடர் தோல்வியால் இசை ஹீரோவுக்கு வந்த சிக்கல்

இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே பெரிய அளவில் வெற்றி படங்கள் எதுவும் வரவில்லை. பிரம்மாண்ட படங்கள் கூட ஆவரேஜ் லிஸ்டில் சேர்ந்தது தான் சோகம்.

அப்படித்தான் அந்த இசை ஹீரோவின் படமும் மொக்கை வாங்கியது. ஆனால் அப்போதும் கூட அவருடைய கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது.

வருடத்திற்கு ஐந்து படங்களாவது ரிலீஸ் செய்து விடும் அந்த நடிகர் சொல்லிக் கொள்ளும்படி சமீபத்தில் எந்த ஹிட் படமும் கொடுக்கவில்லை. ஆனால் நடிப்பில் மட்டும் பிசியாக இருக்கிறார்.

அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் தான் இப்போது நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதில் சமீபத்தில் வெளியான ஒரு படத்தை வாங்கிய விநியோகஸ்தர் கடும் நஷ்டம் அடைந்து இருக்கிறார்.

இதனால் அந்த இசை ஹீரோவிடம் இனிமேல் நடிக்க வேண்டாம். அது உங்களுக்கு செட்டாகவில்லை என்று வெளிப்படையாகவே மூஞ்சில் அடித்தது போல் சொல்லி விட்டாராம்.

இதனால் அதிர்ந்து போன ஹீரோ இப்போது இரு மனநிலையில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனால் எப்படியும் பெரிய ஹிட்டை கொடுத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் அவர் இருக்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்