கடைசி நேரத்தில் பவதாரணி சந்தித்த சோதனைகள்.. பாசத்தால் பதறிப் போன இளையராஜா

Music director ilaiyaraaja daughter Bhavadharani faced medical problems at the last moment: தமிழ் சினிமாவின்  இசை ஜாம்பவானாக விளங்கும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி யாரும் எதிர்பாக்காத வகையில் உடல்நிலை சரியில்லாமல் கடைசி முயற்சியாக ஆயுர்வேத சிகிச்சையை ஆரம்பிபதற்குள் இறந்தது அவரது குடும்பத்தினரை தாண்டி தமிழ்திரை உலகத்தினர் அனைவரையும் சோகத்தில் ஆற்றியுள்ளது.

ஒவ்வொரு தந்தைக்கும் தனது மகள் தனது பெருமையின் அடையாளமாவாள்.  அப்படித்தான் பாரதி படத்திற்காக தேசிய விருது வாங்கிய போது தான் சாதிக்காததை தன் மகள் சாதித்தாள் என்று  பெருமை பட்டு கொண்டார் இளையராஜா. தான் வாங்கிய தேசிய விருதை பொருட்படுத்தாமல் இந்த விருதுக்கு உரியவர் எனது தந்தை தான்! என்னை பாட வைத்தது அவரது கடின முயற்சி தான்! என்று தந்தையே அழகுப்படுத்தி பார்த்தார்  பவதாரணி. இப்படி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அன்பில் பிணைந்து இருப்பது தந்தை மகளுக்கே உரித்தான பாச பிணைப்பு.

இன்று மகளை இழந்து வாடும் இளையராஜாவிற்கு மகளின் இறப்பு சிறிது நாட்களுக்கு முன்பாகவே தெரிந்த ஒன்றுதான். கல்லீரல் புற்று நோயினால் பாதித்து வந்த பவதாரணிக்கு 5 மாதத்திற்கு முன்பாகவே இந்த நோயைப் பற்றி தெரிய வந்தது. அலோபதி முறையில் இந்த நோயின் பாதிப்பு பற்றி கூறி  மேல் சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காது என்று கூறியதால் ஆயுர்வேதா மற்றும் சித்தா மருத்துவத்தில் முயற்சி பண்ணலாம் என்று முடிவு எடுத்தார் இளையராஜா.

Also read: அபசகுனங்களை முன்பே கணித்த இளையராஜா.. கார்த்திகை தீப திருநாளில் சூழ்ந்த இருள்

இதற்கான  பிரத்தியேக மருத்துவமனை ஸ்ரீலங்காவில் இருப்பதை அறிந்து ஒரு மாதத்திற்கு முன் பவதாரணியை ஸ்ரீலங்காவில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். பின்பு இளையராஜா ஸ்ரீலங்காவில் தனது இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு அங்கு தங்கி வந்தாராம்.

பவதாரணி தன் தந்தையை காண வேண்டும் என கால்டாக்ஸி பிடித்து மருத்துவமனையில் இருந்து தந்தையே காண சென்றுள்ளார். இதனை கண்ட இளையராஜா நீ ஏன் வந்த? நான் வந்து பார்ப்பேன்ல்ல என்று பவதாரணியிடம் கோவப்பட்டாராம்.

மருத்துவமனையில் முன்னேற்பாடாக அவருக்கு பல டெஸ்ட்கள் எடுத்து நார்மல் ஆன பின்பு சிகிச்சை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தார்களாம் மருத்துவர்கள் ஆனால் சிகிச்சை துவங்குவதற்கு முன்பாகவே புற்றுநோய் பாதிப்பின் தீவிரம் நுரையீரல் வரை தாக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு கடைசி நேரத்தில் காலனுடன் தீவிரமாக போராடினார் பவதாரணி.

பவதாரணி நோய்யின் தீவிரத்தை முன்னமே அறிந்திருந்ததால் இலங்கை செல்வதற்கு முன்பாகவே, குடும்பத்தினர்கள் அனைவரும் இவருக்கென நிகழ்ச்சி ஏற்பாடு செய்து  ஒவ்வொருவராக பாட்டு பாடி பவதாரணியை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தனர். இவரும் ஒவ்வொருவருக்கும் பரிசு கொடுத்து பிரியாவிடை பெற்று இருக்கிறார்.

Also read: இசைஞானியின் இளவரசி பவதாரணி இசையமைத்த 5 படங்கள்.. ரேவதியுடன் சேர்ந்து செய்த தரமான சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்