முரளியின் டைரியில் இருந்த ரகசிய குறிப்பு.. மனைவி ஷோபா செய்த செயலால் ஆச்சரியத்தில் மூழ்கிய பிரபலம்.!

முரளி என்று சொல்வதைவிட இதயம் முரளி என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு அவர் இதயம் படத்தில் பிரமாதமாக நடித்திருப்பார். அந்த காலத்தில் மோகன், முரளி இருவரும் பெரிய நட்சத்திரங்கள். 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக முரளி உயிரிழந்தார்.

இறந்த முரளிக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்துள்ளது. அவர் உயிரிழந்த பின்பு, அவருடைய டைரி மூலம் தன் கணவர் வைத்திருந்த கடனைத் தெரிந்து கொண்டுள்ளார் ஷோபா. அதில் பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு 17 லட்ச ரூபாய் கடன் கொடுக்க வேண்டும் என இருந்துள்ளது.

ஆனால் திருப்பூர் சுப்ரமணியமோ மனிதாபிமானத்துடன் முரளி இறந்தவுடன், தன்னிடம் இருந்த பத்திரங்கள் அனைத்தையும் கிழித்துப் போட்டுவிட்டார். அதன்பின் சில நாட்கள் கழித்து, திருப்பூர் சுப்பிரமணியத்திடம் தொலைபேசியில் பேசிய ஷோபா, அவரை வீட்டுக்கு அழைத்து 17 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.

அதனை வாங்க மறுப்பு தெரிவித்த திருப்பூர் சுப்பிரமணியனிடம் இது என் கணவர் பணம் தான், அவர் சம்பாத்தியத்தில் வாங்கிய இடத்தை விற்று தான் இந்த பணத்தை உங்களுக்கு திரும்ப செலுத்துகிறேன்.

மேலும் தன் கணவர் யாருக்கும் கடனாளியாகச் சென்று விடக்கூடாது என்றும் கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை தனது பேட்டியில் கூறியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.

murali
murali

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -